states

தீக்கதிர் விரைவு செய்திகள்

லக்னோவில் சுவர் இடிந்து  விழுந்ததில்  9 பேர் பலி

லக்னோ, செப்.16-  உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தில்குஷா கன்டோன்மென்ட் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 சிறார் உள்பட 9 பேர் பலியாகினர்.  தில்குஷா பகுதியில் ராணுவ குடியிருப்பை ஒட்டி  சில தொழிலாளர்கள் குடிசை அமைத்து வசித்துவந்தனர்.  இந்நிலையில், கடுமை யான மழை காரணமாக சுற்றுச் சுவர் இடிந்து குடிசைகள் மீது விழுந்துள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். ஒரு வரை கட்டிட இடிபாடு களுக்கு இடையே இருந்து பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் உயிரிழ ந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரப் பிர தேச முதல்வர் யோகி  ஆதித்யநாத் உத்தரவிட்டுள் ளார்.

பொருளாதாரம் வேகமாக வளர்கிறது: மோடி

சமர்கண்ட், செப்.16- உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொரு ளாதாரங்களில் இந்தியா வும் ஒன்று - என உஸ்பெகிஸ் தானின் சமர்கண்ட் நகரில் துவங்கியுள்ள ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார். “இந்தி யாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்ற விரும்பு கிறோம். ஒவ்வொரு துறை யிலும் புதுமைகளை நாங்கள்  ஆதரிக்கிறோம். இன்று 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களும் 100-க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களும் உள்ளன. எங்களுடையது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று மோடி குறிப்பிட்டுள் ளார்.

45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை: ராகுல் சாடல்

புதுதில்லி, செப்.16- “கடந்த 45 ஆண்டுகளில்  இல்லாத அளவிற்கு இந்தி யாவில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள் ளது. படித்த இளைஞர்கள் வேலை தேடி அலை கின்றனர். அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  அவர்களது எதிர் காலத்தினை வளமைப் படுத்துவது எங்களின் கடமை. நாங்கள் அவர்களு டைய எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வோம். நாட்டில் உள்ள இளைஞர்களின் எதிர் காலத்தை வலிமையாக்க காங்கிரஸ் உழைத்து வரு கிறது” என்று ராகுல் பதி விட்டுள்ளார்.

பெரியார் சிலைக்கு  மு.க.ஸ்டாலின்  இன்று மரியாதை

சென்னை,செப்.16- தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் நாள் அரசு விழா வாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரின் பிறந்தநாள் சமூக நீதி  நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் 17 ஆம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள பெரி யாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

4 நாட்கள் மிதமான  மழைக்கு வாய்ப்பு

சென்னை,செப்.16- தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் சனிக்கிழமை (செப்.17) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப். 18 மற்றும் 19ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிக ளில் செப்.20ஆம் தேதி ஓரிரு இடங்க ளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்.19, 20 ஆகிய தேதி களில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழ்நாடு கடலோரப்பகுதிகள் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர் கள் இப்பகுதிகளுக்கு செல்ல  வேண்டாமென்று அறிவுறுத்தப்படு கிறது.

 

;