states

சித்ரவதைக் கூடங்களாக மாறும், அமலாக்கப் பிரிவு அலுவலகங்கள்!

சென்னை, ஜூலை 19- 2014-இல் நரேந்திர மோடி தலை மையிலான பாஜக அரசு, ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த பின்பு,  அரசியலமைப்புச் சட்ட நிறுவனங் கள் பலவும் அதன் மதிப்பிழக்கச் செய்யப்பட்டு விட்டன. குறிப்பாக, வருமான வரித்துறை, சிபிஐ, அம லாக்கத்துறை போன்றவை, எதிர்க் கட்சிகளை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை, மிரட்டிப் பணிய வைப்பதற்கான பாஜகவின் அர சியல் சித்ரவதை பிரிவுகளாக மாற் றப்பட்டு விட்டன. 70 வயதைக் கடந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் ஆகியோரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய அம லாக்கத்துறை, 80 வயதைக் கடந்த  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கும் குறிவைத்தது. அவர்  சம்மன் இல்லாமலேயே அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு புறப்பட,  அவசர அவசரமாக, நாங்கள் அழைக்கும்போது வந்தால் போதும்  என்று பின்வாங்கியது. 85 வயதாகும் நாட்டின் மூத்த தலைவரும், ஜம்மு -  காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக்  அப்துல்லாவையும் அமலாக்கத் துறை விடவில்லை. சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கான். மக்கள் 75 வயதை எட்டியவர். தொடர்ந்து 9 முறை எம்எல்ஏ-வாக வெற்றிபெற்ற மக்கள் செல்வாக்கைக் கொண்ட வர். இவரை பலமுறை அமலாக்கத் துறை வாட்டி எடுத்தது. இப்படி நாடு முழுவதும் அமலாக்கத்துறையால் வேட்டையாப்படும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏராளம்.

அந்த வகையில்தான், 72 வயதைக் கடந்த ஒருவரை, அதுவும் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சராக இருப்பருவமான க.  பொன்முடியை, விசாரணை என்ற  பெயரில் அமலாக்கத்துறை இரண்டு  நாட்களாக பல மணிநேரம் சித்ர வதைக்கு உள்ளாக்கியிருப்பதாக குற்றச்சாட்டை எழுந்துள்ளது. தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, அவ ரது மூத்த மகன் கவுதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான சென்னை, விழுப்புரம் பகுதிகளில்  உள்ள 8 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூலை 17 அன்று சோதனை நடத்தி இருந்தனர்.  2006 முதல் 2011 திமுக ஆட்சிக்  காலத்தில் பொன்முடி கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது பொன்முடி, தனது பதவி யின் மூலம் அவரது மகன் கவுதம  சிகாமணி மற்றும் உறவினர்கள் முறைகேடாக செம்மண் குவாரி களில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28  கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுத்தி யதாக பொன்முடி, மகன் கவுதம  சிகாமணி, உறவினர் ஜெயச்சந்தி ரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்  புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்  துறை வழக்கு பதிவு செய்திருந்தது. 11 ஆண்டுகளுக்கு முந்தைய  இந்த வழக்கில்தான், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்  சர் பொன்முடி வீடு, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி.யின் வீடு களில் ஜூலை 17 அன்று காலை 7 மணி முதல், சிஆர்பிஎப் வீரர்களின் துணையோடு அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது.

அப்போது, சைதாப்பேட்டையில் பொன்முடி வீட்டில் நிறுத்தி வைத்தி ருந்த காரிலிருந்து முக்கிய ஆவ ணங்களையும், சென்னை வீட்டில்  இருந்து கணக்கில் காட்டப்படாத சுமார் 70 லட்சம் ரூபாய் பணம் மற்றும்  10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளி நாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்த தாகவும் தெரிவித்த அமலாக்கத் துறை அதிகாரிகள், பொன்முடியின் வங்கி இருப்பில் வைத்திருந்த 48  கோடி ரூபாயையும் முடக்கி வைத் துள்ளதாக அறிவித்தனர். காலை 7 மணிக்குத் துவங்கி 13  மணிநேரம் சோதனை நடத்திய அம லாக்கத்துறை அதிகாரிகள், அதன் பின்னர், இரவு 10 மணியளவில் அமைச்சர் க. பொன்முடியை, சிஆர்  பிஎப் பாதுகாப்புடன் நுங்கம்பாக் கம் சாஸ்திரி பவனில் உள்ள அம லாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, கைப்  பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் தொடர்பாக அதிகாலை 3.30  மணி வரை சுமார் 6 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை மேற் கொண்டு வாக்குமூலங்களை வீடியோவாக பதிவு செய்தனர். இதேபோல சைதாப்பேட்டை இல்லம் மற்றும் அமலாக்கத்துறை  அலுவலகத்தில், பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி.யிட மும் அமலாக்கத்துறை அதிகாரி கள் விசாரணை நடத்தினர். பின்னர்  மறுநாளும் பொன்முடி, பொன்முடி யின் மகன் கவுதம சிகாமணி ஆகி யோர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதன்படி செவ்வாயன்றும் மாலை 4 மணிக்கு அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி எம்.பி. ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் அமலாக் கத்துறை அதிகாரிகள் தயார் செய்து  வைத்திருந்த 100-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு ஆம், இல்லை  என பதில் கூற வைத்து, அதனை வீடி யோவாக பதிவு செய்ததாக கூறப்படு கிறது. இந்த விசாரணையும், மாலை  4 மணிக்குத் துவங்கி இரவு 10 மணி வரை சுமார் 6 மணிநேரமாக நடை பெற்றுள்ளது.  மீண்டும் விசாரணைக்கு அழைத்  தால் ஆஜராக வேண்டுமென்ற உத்த ரவோடு இருவரையும் அனுப்பி வைத்த அமலாக்கத்துறை, புத னன்று காலை கவுதம சிகாமணி  எம்.பி.யை மட்டும் மீண்டும் வர வழைத்து பல மணிநேரமாக விசா ரணையைத் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில்தான், அமலாக்கத் துறையின் இந்த விசாரணை முறைக்கு கண்டனம் எழுந்துள்ளது. இயல்பான விசாரணை நடைமுறை என்பதைத் தாண்டி, ஒருவரை பல  மணிநேரங்களுக்கு நீண்ட விசா ரணை என்ற பெயரில் சித்ரவதைக்கு உள்ளாக்கி, மன உளைச்சலை ஏற்  படுத்துவதன் மூலம் அவரை அச்சு றுத்தும் நோக்கத்தை பின்னணியில் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக திமுக வழக்கறி ஞர் சரவணன் பேட்டி ஒன்றை அளித்  துள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது: “பொன்முடியை காலை 10 மணிக்கு ஆரம்பித்து, நள்ளிரவு 3.30  மணி வரை விசாரித்து இருக்கிறார்  கள். அவருக்கு வயது 72. ஏற்க னவே உடலில் பல பிரச்சனைகள்  உள்ளன. இப்படித்தான் அமலாக்கத்  துறை மனிதாபிமானமற்ற முறையில்  நடக்கிறது. 3.30 மணி வரை உட்  கார்ந்து இருக்கும் நமக்கே சோர்வாக இருக்கிறது என்றால், 72 வயதான வருக்கு எப்படி இருக்கும்? எப்படிப்  பட்ட ஒரு மன உளைச்சலை, உடல்  உளைச்சலை இது கொடுத்திருக் கம்? இப்படி செய்யக்கூடாது என்று தான் உச்சநீதிமன்றம் பல முறை  எச்சரித்து இருக்கிறது. அதற்கா கவே மனித உரிமைகள் ஆணையம்  உள்ளது. மனித உரிமைகளை காப்  பாற்ற சட்டம் உள்ளது. ஆனால், எதைப்  பற்றியும் கவலைப்பட மாட்டோம். இரவு 3.30 மணி வரை வாக்குமூலம் வாங்குவேன் என்கிறார்கள். இதை  நாளை வாங்கினால் வாக்குமூலம் மாறப்போகிறதா? ஆதாரங்கள் அழி யப்போகிறதா? 2007-ஆம் ஆண்டு  வழக்கிற்கு 2023 ஆம் ஆண்டில் விசா ரிப்போம் என்கிறது அமலாக்கத் துறை. அமலாக்கத்துறை அலுவல கமா அல்லது சித்ரவதைக் கூடமா? என்று தெரியவில்லை. 

பொன்முடியை குறிவைப்ப தற்கு காரணம் ஆளுநர் ரவிதான். கொள்கை ரீதியாகவும், அரசு ரீதி யாகவும் துணைவேந்தர் நியமனம்,  புதிய கல்விக்கொள்கை போன்ற வற்றை ஏற்கவில்லை. சித்தாந்த ரீதி யாக ஆளுநரை தொடர்ந்து எதிர்த்த வர் பொன்முடி. கடந்தவாரம் ஆளு நர் தில்லி சென்றார். மறுவாரம் அம லாக்கத்துறை வருகிறது. 2007-இல்  நடந்த வழக்கிற்கு 2023-இல் எந்த ஆதாரத்தைத் தேடுகிறீர்கள். என்ன  கிடைக்கும்?ஆனால், அமலாக்கத் துறை 10 ஆண்டுகள் கழித்துத்தான்  தேடுவோம். 3.30 மணி வரை விசா ரிப்போம் என மனித தன்மையற்ற முறையில் செயல்படுகிறது. திமுக  அரசு மீது களங்கம் கற்பிக்க வேண்  டும் என்றே இவர்கள் செயல்படு கிறார்கள். 2024 தேர்தலுக்காக இப் படி ஒரு மிரட்டலை செய்கிறார்கள்” என்று சரவணன் கூறியுள்ளார்.

;