states

வறுமை-பொருளாதார சூழலால் கல்வியில் சேராத 6,718 மாணவர்கள்

சென்னை,அக்.15- தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு  முடித்தும்  6,718 மாணவர்கள் வறுமை,  பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயர் கல்வி யில் சேரவில்லை என்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில்  12 ஆம் வகுப்பு முடித்த 79,792 மாண வர்களில் எத்தனை பேர் உயர்கல்வி  சேர்ந்துள்ளனர் என்று  பள்ளிக் கல்வித் துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 8,588 மாணவர்கள் எங்கும் சேரவில்லை என்று தெரியவந்தது. இந்நிலையில் இவர்களை தனித்தனியாக தொடர்புகொண்டு ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித் துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த மாணவர்களின் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும் என்று ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்கு நர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் எழுதினார். இந்த கடிதத்தின் அடிப்படையில் மாணவர்களின் விவரம் சேகரிப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களில் 6,718 பேர் வறுமை, குடும்பச் சூழல், நிதி பற்றாக்குறை, உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை, தொழில் செய்தல், அருகாமை கல்லூரி இல்லாமை போன்ற காரணங்களால் உயர் கல்வி யைத் தொடரவில்லை என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மாணவர்கள் உயர் கல்வியை தொடங்குவதற்கு ஏதுவாக வரும் 20 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

;