சென்னை,ஜூலை 11- தமிழ்நாட்டில் 300 நியாய விலை கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. ஏற்கெனவே சென்னையில் 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மேலும் 300 நியாய விலை கடைகளில் புதன்கிழமை (ஜூலை 12) முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. ஏற்கெனவே 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலை யில் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்து கிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைவால் தமிழ்நாட்டில் தக்காளியின் விலை கடும் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி யுள்ளனர். மக்கள் குறைந்த விலையில் தக்காளியை வாங்கி பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் பசுமை பண்ணை கடைகளில் திங்களன்று ஒரு கிலோ தக்காளி ரூ.58க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வகையில் சென்னையில் ரேசன் கடைகள் மூலம் பொதுமக்க ளுக்கு தக்காளி குறைந்த விலைக்கு கிடைப்பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்கெனவே தொடங்கி யிருந்த நிலையில் தற்போது தமிழ் நாட்டில் 300 கடைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள் ளது. மேலும் மக்களுக்கு தேவை அதிகரிக்கும் பட்சத்தில் மற்ற அனைத்து நியாய விலைக் கடை களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பல்பொருள் அங்காடி, கூட்டுறவு சங்கங்களின் அங்காடிகளில் மளிகை பொருட்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது.