states

தீக்கதிர் விரைவு செய்திகள்

காஷ்மீரில் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு

ஸ்ரீநகர், செப். 8 - ஜம்மு-காஷ்மீரின் ரேசாய் மாவட்டம் கத்ரா பகுதியில் வியாழனன்று காலை 7.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக  பதிவாகி இருந்தது. இந்த  நிலநடுக்கத்தில் உயிர் சேத மோ அல்லது பொருட்சேத மோ ஏற்பட்டதாக தகவல் எது வும் இல்லை. சில இடங் களில் வீடுகளில் லேசான அதிர்வு ஏற்படவே, மக்கள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறினர். கடந்த மாதத் திலும், ஜம்மு மண்டலத்தில் உள்ள தோடா, ரேசாய், கிஸ்ட்வா, உத்தம்பூர் மாவட் டங்களில் 13 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்டத்திலும் களைகட்டியது ஓணம் பண்டிகை

குழித்துறை, செப். 8- கேரள பாரம்பரியத்தில் மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் ஓணம் பண்டிகை  குமரி மாவட்டத்தி லும் பொதுமக்களால் மிக சிறப்பாக கொண்டாடப் பட்டது.   கடந்த இரண்டு வருடங்க ளாக கொரோனா காரண மாக ஓணம் பண்டிகையை பொதுமக்களால் சிறப்பாக கொண்டாட முடியவில்லை. ஆனால் இவ்வாண்டு கொ ரோனா தாக்கம் குறைந்துள் ளதால் பொதுமக்கள் மிக உற்சாகத்துடன் ஓணப் பண்டிகையை கொண்டாடி னர். வீடுகளுக்கு முன் அத்தப்பூ  கோலமிட்டு புத் தாடை அணிந்து ஓண ஊஞ்சல் கட்டி ஓண சத்யா என்று அழைக்கப்படும் ஒண சாப்பாடு சமைத்து சாப்பிட்டு ஓணம் பண்டி கையை உற்சாகத்துடன் கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக குழித்துறை பிரதேச கிரிக்கெட் கிளப் சார்பில் தபால் நிலைய சந்திப்பில் அத்தப்பூ கோலமிட்டு செண்டை மேளத்துடன் ஓண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. குழித்துறை நகர மன்ற தலைவர் ஆசைத்தம்பி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சி யை துவக்கி வைத்தார்.  நகர்மன்ற உறுப்பினர் கள் விஜயலட்சுமி, விஜீ, முன்னாள் நகராட்சி உறுப்பி னர் சுனில் குமார், கிளப்பு  உறுப்பினர்கள் கண்ணன், கிருஷ்ணகுமார், அனில் குமார், பகத்சிங், ரெஜி, தொழில் அதிபர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மகா பலி வேடமிட்ட நபர் வீடு  வீடாக சென்று பொதுமக்க ளை மகிழ்வித்தார். தெய்யம், புலியாட்டம், மயிலாட்டம் மற்றும் செண்டை மேளத்து டன் சிறப்பாக ஓணம் கொண் டாடப்பட்டது மாலையில் கேரள இசைக்குழுவின் இன் னிசை நிகழ்ச்சி நடை பெற்றது.

4-ஆம் ஆண்டில் தமிழிசை சோகப் பாட்டு!

“தெலுங்கானா மக்களுக்கான சேவையில் 4-வது ஆண்டு தொடக்கம்” என்ற தலைப்பில் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார். அதில், “தேசிய கொடியை ஏற்ற ஆளுநருக்கு அனுமதி மறுக்கப்பட்டது, உண்மையில் என்னை மனவேதனை அடைய செய்தது. ஆளுநர் உரை மற்றும் நாட்டின் மூவர்ணக் கொடியை குடியரசு தினத்தன்று ஏற்ற எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கூட, நான் செல்லும் இடங்களில் எல்லாம் அரசின் மரபுமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஒரு பெண் ஆளுநரை எப்படி பாரபட்சமுடன் நடத்தினர் என்று மாநிலத்தின் வரலாறு பேசும்” என்று ‘சோகப்பாட்டு’ பாடியுள்ளார்.

சிறந்த சிறையாக பரப்பன அக்ரஹாரா தேர்வு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அனைத்து இந்தியச் சிறைகளுக்கான 6-ஆவது சுகாதார போட்டி நடந்தது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 1,319 சிறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் இந்தியாவின் சிறந்த சிறையாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை தேர்வு செய்யப்பட்டது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு முதல் பரிசும், ஆந்திராவில் உள்ள மத்தியச் சிறைக்கு 2-ஆவது பரிசும், தமிழ்நாடு மத்தியச் சிறைக்கு 3-ஆவது பரிசும் கிடைத்துள்ளது.

விவசாயிகளுக்கு உதவ மாயாவதி கோரிக்கை!

பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உத்தரப் பிரதேச அரசு உதவ வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். “உத்தரப் பிரதேசம் போன்ற மிகப்பெரிய விவசாயிகள் கொண்ட மாநிலத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.192 கோடி செலவழிக்கப்படும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.38 கோடி மட்டுமே பயிர் பாதுகாப்பு மற்றும் சேமிப்புக்குச் செலவழிக்கப்படுகிறது” என்றும் அவர் பாஜக அரசுக்கு எதிராக புள்ளிவிவரங்களை அளித்துள்ளார்.

கிரகணங்களையொட்டி திருப்பதி கோயில் மூடல்

அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே அக்டோபர் 25-ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணியளவில் 11¼ மணிநேரம் மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல நவம்பர் 8-ஆம் தேதி மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்வதை ஒட்டியும், அன்று காலை 8.40 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரை 10 மணிநேரம் கோயில் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆதரவு எம்.பி.க்கு சிவசேனா கண்டனம்!

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த போது, அவரை கடுமையாக விமர்சித்த நடிகையும், பாஜக ஆதரவு சுயேட்சை எம்.பி.யுமான நவநீத் ராணா கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் உள்ள அவர் தொடர்ந்து சிவசேனாவை விமர்சித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சனா காடி பதிலளித்துள்ளார். அதில் “காகத்தின் சாபத்தால் மாடு சாகாது. சிவசேனா நேற்று வலுவாக இருந்தது. இன்றும் வலுவாக உள்ளது. உங்களைப் போன்ற 100 எதிரிகள் ஒன்றாக நின்றாலும், நாங்கள் மீண்டும் காவிக்கொடியை இந்த மகாராஷ்டிராவில் ஏற்றுவோம். எத்தனை சூர்ப்பனகைகள் வந்தாலும் அவர்களின் மூக்கை அறுப்போம்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

ரன்வீர் - ஆலியா பட்டுக்கு பஜ்ரங் தள் கறுப்புக்கொடி

நடிகர் ரன்வீர் கபூர், அவர் மனைவி ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா உட்பட பலர் நடித்துள்ள ‘பிரம்மாஸ்திரா’ திரைக்கு வருவதையொட்டி இயக்குநர் அயன் முகர்ஜி, நடிகர் ரன்வீர் கபூர், ஆலியா பட் ஆகியோர் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலுக்குச் செவ்வாய்க்கிழமை மாலை சென்றனர். இதனிடையே, ‘நான் மாட்டிறைச்சிக்கு பெரிய ரசிகன்’ என்று கூறிய ரன்வீர் கபூரும், இந்துக்களுக்கு எதிரானவரான ஆலியா பட்டும் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று, விஎச்பி, பஜ்ரங் தளம் கூட்டத்தினர் கறுப்புக் கொடியுடன் கலகத்தில் ஈடுபட்டனர். 

நிதிஷ், சோரனோடு கைகோர்க்க மம்தா தயார்! 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், 2024 பொதுத்தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் தில்லியில் முகாமிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை நிதிஷ் குமார், ஹேமந்த் சோரன் மற்றும் பிற தலைவர்களுடன் சேர்ந்து சந்திப்போம்” எனக் கூறியுள்ளார்.

படகுகள் வாங்கும் பெங்களூரு ஐடி நிறுவனங்கள்

தொடர் கனமழையால், பெங்களூரு வெள்ளத்தில் மிதந்த அனுபவத்தை கருத்தில் கொண்டு, அங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும், பாதுகாப்புக் கருதி படகுகளை  வாங்கி வைக்கும் திட்டம் பற்றி யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏதேனும் பேரிடர் நேரிட்டு, தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அல்லது ஊழியர்களின் குடும்பத்தி னர் வெள்ளத்தில் சிக்கிக்கொள்ள நேரிட்டால், அவர்களை மீட்க தங்கள் கைவசம் ரப்பர் படகுகளோ அல்லது சிறிய ரக படகுகளோ இருந்தால் நல்லது என்று ஐ.டி. நிறுவனங்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தி பயணம் வெற்றி பெற கி.வீரமணி வாழ்த்து

சென்னை, செப்.8- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினரும் சங் பரிவார் சக்திகளுக்கு மிகப் பெரிய எதிர்ப்பு ஏவுகணையாக ஒளிரு பவருமான ராகுல் காந்தி, குமரி தொடங்கி காஷ்மீர் வரை ‘‘இந்திய ஒற்றுமை’’ என்ற நோக்கில் மேற் கொண்டிருக்கும் நடைப்பயணம் வெற்றி பெற வாழ்த்துவதாக திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டி ருக்கும் அறிக்கையில், மதம், சாதி,  மொழியின் பெயரால் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் பாசிச சக்திகளை எதிர்க்கும் அவரின்  உரத்த குரல் இந்தியா முழுவதும் எதி ரொலிக்கும் என்பதில் அய்யமில்லை. மதச்சார்பின்மை, சமூகநீதி, சம தர்மம்,  இறையாண்மை, ஜனநாயகம் இவற்றிற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத் தலை முறியடித்து, நாட்டை நாசகார சக்திகளிடமிருந்து விடுவிக்க திரு.ராகுல்காந்தி அவர்கள் மேற்கொண் டுள்ள நடைப்பயண வெற்றிக்கு நம்  கைகளையும் இணைப்போம். நடைப் பயணம் வெற்றி பெறட்டும். அதன் நோக்கம் முற்றிலும் நிறைவேறட்டும்  என்றும் அவர் கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன்: வரிவிலக்கு  அளிக்க கோரிக்கை

சென்னை, செப்.8- பொன்னியின் செல்வன் படத்திற்கு  வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை  விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி கூறுகையில், “பொன்னியின் செல்வனை போன்ற படங்களை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும். எல்லோரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்காக இப் படத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வரி விலக்கு அளிக்க வேண்டும்” என்றார்.

இந்தியாவிலேயே முதல் முறை: முகச் சிதைவு சிறுமிக்கு அறுவை சிகிச்சை  

சென்னை,செப். 8- உலக பிசியோதெரபி மருத்துவ  தினம் மற்றும் சவீதா மருத்துவமனை யில் பிசியோதெரபி மருத்துவத் துறை யின் 30வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றது. அதில் 200 பேருக்கு இலவச  மருத்துவ சிகிச்சையும், 250 மரக் கன்று களும் நடப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சவீதா கல்வி குழுமத்தின் இயக் குநர் தீபக் கூறுகையில், “எங்கள் மருத்துவமனையில் பிசியோதெரபி துறையின் 30வது ஆண்டு விழா மற்றும்  உலக பிசியோதெரபி மருத்துவ தினத்தை முன்னிட்டு 200 ஏழை எளிய  மக்களுக்கு இலவச சிகிச்சை அளித் தோம். சில தினங்களுக்கு முன்பு சவீதா  மருத்துவமனையில் முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடை்பெற்று, சிறுமியும் நல்ல முறையில் உள்ளார். இந்தியாவில் இந்த வகை அறுவை  சிகிச்சை முதல்முறையாக சிறுமி டானி யாவுக்கு தான் வெற்றிகரமாக நடத்தப் பட்டுள்ளது. அறுவை சிகிச்சை வெற்றி கரமாக நடைபெற்றது டானியாவில் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும். இந்த சாத னையை சாத்தியமாக்கிய சவீதா  மருத்துவமனையின் மருத்துவர்க ளுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

ஓ.பி.எஸ்.சை சேர்க்க வாய்ப்பு இல்லை

சென்னை, செப். 8- அதிமுக தலைமை கழகத்தில்  எடப்பாடி பழனிசாமி வியா ழனன்று(செப்.8) செய்தி யாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறு கையில், “அதிமுக பொதுக்குழு  ஒரு மனதாக ஒற்றைத் தலைமை என்பதை முடிவு  செய்து இடைக்கால பொதுச் செயலாளராக நானும் மற்ற  நிர்வாகிகளும் தேர்வு செய்யப் பட்டார்கள். பொதுச்செயலாள ருக்கான தேர்தல் விரைவில் தொடங்கும்” என்றார். ஓ.பி.எஸ். உயர்ந்த பொறுப் பில் இருந்தவர். அவரே ஒரு கொள்ளைக் கூட்டம் போல் புகுந்து  அராஜகத்தில் ஈடுபட்டார். இனி  மன்னிப்பு கேட்டு வந்தாலும் தொண்டர்கள் ஏற்க மாட்டார் கள். 96 விழுக்காடு பொதுக் குழு உறுப்பினர்கள் பெரும் பான்மையான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் உள்ளது. சட்ட ரீதியாகவும் யாரும் எதையும் செய்து விட முடியாது என்றும் அவர் கூறினார்.

டி.ஜெயக்குமாருக்கு எதிரான  வழக்கில் செப்.13 இல் தீர்ப்பு

சென்னை,செப்.8- சென்னை அருகே துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில  உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்கு மாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள்  மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயகுமாருக்கு எதிராக  மகேஷ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது  மகள் ஜெயப்ரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் தீட்டுதல்  உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் வழக்கு  தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு என்றும், 2016ஆம் ஆண்டு  நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு மகேஷ் தரப்பில் 2016ஆம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி செப்டம்பர் 13ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தார்.

ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படவில்லை; மூடப்படும் ஐஆர்சிடிசி உணவகங்கள்

கொச்சி, செப்.8- ரயில் நிலையங்களில் குறைந்த விலையில் உணவு வழங்கும் ஐஆர்சிடிசியின் உணவகங்கள் மூடப்படுகின்றன. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவில் 12 உணவகங்கள் கடந்த ஒரு மாதத்திற்குள் மூடப்பட்டன. கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம் சந்திப்பு (தெற்கு), டவுன் (வடக்கு), திருச்சூர், பாலக்காடு, ஷோர்னூர், கோழிக்கோடு, கண்ணூர், மங்களூரு ரயில் நிலையங்களில் செயல்பட்டு வந்த உணவகங்கள் மூடப்பட்டன. ஐஆர்சிடிசியின் நடைமுறைக்கு உதவாத கேட்டரிங் கொள்கைகளே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. சில உணவுப் பொருட்களின் விலையும், கடைகளின் உரிமக் கட்டணமும் உயர்த்தப்பட்டதால், பலர் தங்கள் ஒப்பந்தத்தை காலாவதி தேதிக்கு பிறகு புதுப்பிக்கவில்லை. ஓணம் பண்டிகையையொட்டி பயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளது. உணவகங்கள் மூடப்பட்டிருப்பது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளம் சந்திப்பில் உள்ள சைவ, அசைவ உணவகங்கள் மூடப்பட்டு ஒரு வாரமாகிறது. எர்ணாகுளம் டவுன் மற்றும் கொல்லத்தில் மீதமுள்ள உணவகங்கள் மூடப்படும் தருவாயில் உள்ளன







 

;