states

விரிவடையும் எதிர்க்கட்சிகள் அணி

புதுதில்லி, ஜூலை 12 - கர்நாடகா மாநிலம் பெங்களூரு வில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சி களின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, ஜூன் 23 அன்று பாட்னாவில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் 17 கட்சிகள் கலந்து கொண்ட நிலையில், இரண்டாவது கூட்டத்தில் கூடுதலாக 7 கட்சிகள் பங்கேற்க உள்ளன.  எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வகையிலும், 2024 தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக ஆலோசிக்கவும், ஜூன்  23 அன்று அனைத்து எதிர்க்கட்சி களின் கூட்டம், பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது.  அந்தக் கூட்டத்தில், பாஜக-வைத் தோற்கடிக்கும் வகையில், 2024  மக்களவைத் தேர்தலை எதிர்க்கட்சி கள் கூட்டாக சந்திப்பதெனவும், இது தொடர்பாக பொதுவான செயல் திட்டத்தை உருவாக்குவது தொடர் பாக அடுத்த கட்டத்தில் விவாதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில்தான், எதிர்க்கட்சி களின் இரண்டாவது கூட்டத்தில் 24 கட்சிகள் வரை கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப் பாக, வைகோ தலைமையிலான ம.தி.மு.க., இ.ஆர். ஈஸ்வரன் தலைமையிலான கொ.தே.ம.க., தொல். திருமாவளவன் தலைமை யிலான வி.சி.க., இடதுசாரிக் கட்சி களான ஆர்.எஸ்.பி, பார்வர்டு பிளாக்,  கேரளத்தில் முக்கிய கட்சியாக இருக்கும் ஐ.யூ.எம்.எல்., கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகள் புதிதாக இந்தக் கூட்டத்தில் பங் கேற்க உள்ளன.  

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கே ற்குமாறு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதி யுள்ளார். அதில், “நமது ஜனநாயக கொள்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஜூன் 23 அன்று நடைபெற்ற பாட்னா கூட்டத்தில் விவாதிக்க முடிந்ததாலும், அடுத்தப் பொதுத் தேர்தலை ஒற்றுமையாக எதிர் கொள்ள ஒருமனதான முடிவு எட்டப் பட்டதாலும், முதல் கூட்டம் வெற்றிகர மாக அமைந்தது. இந்நிலையில், அந்த விவாதத்தை தொடர்வதும், நாம் உருவாக்கிய ஒற்றுமையை கட்டி எழுப்புவதும் மிகவும் முக்கிய மானது என்று நான் கருதுகிறேன். நமது நாடு சந்திக்கும் சவால்களுக் கான தீர்வுகளுக்காக நாம் அனை வரும் ஒன்றிணைந்து செயல்படு வது அவசியம். எனவே, ஜூலை 17 அன்று பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடக்கும் இரவு விருந்திலும் கலந்து கொள்ளுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் ஜூலை 18 அன்று முற்பகல்  11 மணிக்கு மீண்டும் தொடங்கி நடை பெறும். உங்கள் அனைவரையும் பெங்களூரு கூட்டத்தில் சந்திக்க ஆவலாக உள்ளேன்” என்று கார்கே குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் நாடாளு மன்றத் தலைவர் சோனியா காந்தி,  பாட்னா கூட்டத்தில் கலந்து கொள்  ளாத நிலையில், அவரும் பெங் களூரு கூட்டத்தில் கலந்துகொள் வார் என்று தகவல்கள் வெளியாகி யுள்ளன.