states

இ-சேவை 2.0 திட்டத்தில் 194 சேவைகள்

சென்னை,மே 11- தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின்  கீழ் உள்ள 580 மையங்கள் உட்பட பல்வேறு  முகமைகளின் கீழ் 10,818 இ-சேவை மையங் கள் செயல்படுகின்றன. இங்கு தற்போது 40  சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், இ-சேவை 2.0 விரைவில் பயன்பாட் டுக்கு வர உள்ளதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் புதிதாக மின்சார வாரியம், குடிநீர், மருந்து கட்டுப்பாடு  உள்ளிட்ட 194 சேவைகளை வழங்க தகவல்  தொழில்நுட்ப துறை முடிவு செய்துள்ளது.