கர்நாடகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022 மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை பல்வேறு காவல் நிலையங்களில் 18 ஆயிரத்து 428 கலவர வழக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக 2018-இல் 4 ஆயிரத்து 746 கலவர வழக்குகள் பதிவாகி உள்ளன. 2019-இல் 4 ஆயிரத்து 107 வழக்குகளும், 2020-இல் 4 ஆயிரத்து 553 வழக்குகளும், 2021-இல் 3 ஆயிரத்து 971 வழக்குகளும், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 1,051 வழக்குகளும் பதிவாகி உள்ளன. நாளொன்றுக்கு 12 கலவர வழக்குகள் விகிதம் பதிவாகி உள்ளன. இவற்றில் 60 மதக் கலவர வழக்குகளும் பதிவாகி உள்ளன.