சென்னை,ஜூலை 3- தமிழ்நாட்டில் டிஜிபி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் புதிதாக பதவி ஏற்றதும் காவலர்களுக்கு 10 கட்டளைகளை பிறப்பித்துள்ளனர். தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கடந்த ஜூன் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதனால் புதிய டிஜிபியாக சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் பதவி ஏற்றார். அதேபோல சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த சங்கர் மாற்றப்பட்டு ஆவடி ஆணையராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவி யில் இருந்த அருண், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார். புதிதாக பதவி ஏற்ற இரு அதிகாரி களும் கடந்த இரு நாட்களாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது, குற்றங்களை குறைப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதில், டிஎஸ்பி மற்றும் உதவி ஆணை யர்களாக உள்ளவர்கள் பகல் நேர பணியுடன் நள்ளிரவு 2 மணி வரை பணியில் இருக்க வேண்டும். ஆய்வாளர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு பணிகளை கவனிக்க வேண்டும். ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள் ஜாமீனில் வெளியில் வந்திருந்தால் அவர்களை கைது செய்ய வேண்டும். அவர்களை கண்காணிக்க வேண்டும். தவறு செய்யாத ரவுடிகளை, திருந்தி வாழும் ரவுடிகளை குற்றவியல் நடைமுறைச்சட்டம் 110 விதியின் கீழ் கைது செய்ய வேண்டும்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்டிப்பாக வாகனச் சோதனை நடத்த வேண்டும். அப்போது குற்றப் பட்டியலில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும். குடி போதையில் வாகனம் ஓட்டுகிற வர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மதுவிலக்கு குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். குறிப்பாக வட மாவட்டங் களில் மது விற்பனையை கண்ட றிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் சோதனை நடத்தி சரி யான முகவரியை கொடுத்து தங்கி யுள்ளார்களா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கும் விடுதி உரிமையாளர்கள் அல்லது நிர்வாகிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருக்கக் கூடாது. காலையில் 12 மணிக்கு முன் திறக்கக் கூடாது. உரிமம் இல்லாமல் பார் நடத்தினால் அவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பாருக்கு சீல் வைக்க வேண்டும். ரோந்துப் பணிகள் மற்றும் வாகனச் சோதனைகள், இரவுப் பணிகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூலை 3 முதல் பணிகள் மாற்றியமைக்கப் பட்டுள்ளது.