ஜார்கண்டில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் 14 வயது சிறுமி, தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரில் தெரிவித்ததாவது, சிறுமியின் காதலன் ஜூன் 9 ஆம் தேதி, அச்சிறுமியை தன்பாத் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, துஹாதண்டில் உள்ள சிறுவனின் வீட்டில், ஒரு நண்பருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
பின்னர், அச்சிறுமியை ஒரு அறையில் பூட்டியுள்ளனர்.மறுநாள் மாலை ஜூன் 10 ஆம் தேதி வேறு ஐந்து நண்பர்களுடன் வந்து, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு புதரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுவர்களில் ஒருவன் வீடியோவும் எடுத்துள்ளான். சிறுமி உதவிக்காக அழும் சத்தத்தினைக் கேட்ட அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். ஆனால், அதற்குள் சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனக் கூறியுள்ளார்.
தகவலறிந்த பின், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சிறுவனின் வீட்டில் சோதனை நடத்தியபோது, அங்கு யாரையும் காணவில்லை என்றும், குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும் கூறியுள்ளனர்.