states

img

ஜம்மு காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 11 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சாவ்ஜியன் பகுதியில் சென்று கொண்டிருந்த மினி பேருந்து எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளதாக்கில் கவிழ்ந்து.
இந்த விபத்தில் மின் பேருந்தில் பயணம் செய்த 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காயம் அடைந்தவர்கள் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மண்டி துணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.