states

img

பி.டி.தாமஸ் எம்எல்ஏ காலமானார்

கொச்சி, டிச.22- கேரளத்தில் முன்னணி காங்கிரஸ் தலைவரும், திருக்காக்கரை தொகுதி எம்எல்ஏவு மான பி.டி.தாமஸ் (71), காலமானார். வேலூர்  சி.எம்.சி.யில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று  வந்தவர் டிச.22 புதனன்று காலை 10.15 மணிக்கு இறந்தார். இவர் கேபிசிசி செயல் தலைவராகவும், 2009-2014 இல் மக்களவை உறுப்பினராகவும் 2016 முதல் திருக்காக்கரா சட்ட மன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்தார்.

முதல்வர் இரங்கல்

முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  பி.டி.தாமஸ் மறைவால் ஒரு சிறந்த நாடாளுமன்றவாதியை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அரசியல் நிலைப்பாட்டையொட்டி சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பிரச்சனைகளை முன்வைத்தவர் பி.டி.தாமஸ். சிறந்த பேச்சாளர் மற்றும் அமைப்பாளர் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

;