states

img

உ.பி. பாஜக அரசு 2 ஆண்டுகளாக சிறைவைத்த செய்தியாளர்

சித்திக் கப்பானுக்கு ஜாமீன்

திருவனந்தபுரம், செப்.9- யோகி ஆதித்யநாத்தின் உத்த ரப்பிரதேச பாஜக அரசு உபா சட்டத்  தில் கைது செய்து கடந்த 2 ஆண்டு களாக சிறை வைத்த செய்தியாளர் சித்திக் கப்பானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தேஜஸ் என்கிற நாளிதழின் தில்லி செய்தியாளர் சித்திக் கப்பான். உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் 19 வயது சிறுமி கும்பல் பாலியல் வல்லு றவுக்கு உள்ளானார். இது குறித்து செய்தி சேகரிக்கச் செல்லும் வழி யில் 2020 அக்டோர் 5 இல் சித்திக்  கப்பான் கைது செய்யப்பட்டார். அவர் மீது சட்டவிரோத நடவடிக்கை கள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஜாமீன் கோரி உபி உயர்நீதி மன்றத்தை அணுகினார். அவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளு படி செய்ததைத் தொடர்ந்து உச்சநீதி மன்றத்தை அணுகினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யூ.யூ.லலித் முன்பு வெள்ளியன்று (செப்.9) இந்த மனு விசாரணைக்கு  வந்தது.  சித்திக் கப்பானுக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளதாகவும் ஜாமீன்  வழங்கக் கூடாது எனவும் உபி அரசு  தரப்பு வழக்கறிஞர் மகேஷ் ஜெத்  மலானி வாதிட்டார். இதுகுறித்து கப் பானின் வழக்கறிஞர் கபில்சிபல், உபி காவல்துறையினரால் கப்பான் கைது செய்யப்பட்டபோது கைப்பற்  றிய சில அடையாள அட்டைகளைத் தவிர கூடுதலாக எதையும் சமர்ப் பிக்க முடியவில்லை என்பதை சுட் டிக்காட்டினார்.

இது தவிர தேஜஸ் ஆசிரியர் பி. கோயாவுடன் கப்பான் நடத்திய  வாட்சப் பதிவுகள் சமர்ப்பிக்கப்பட் டன. அதில் தேஜஸ் நாளிதழின் (பாப்  புலர் பிரண்ட் ஆப் இந்தியா) நிலை பாடுகளோடு தன்னால் உடன்பட  முடியவில்லை என தெரிவித்துள் ளார். இது அவரது கைதுக்கு எதிரான ஆவணம் என்பதை அது மலை யாளத்தில் உள்ளதால் அவர்கள்  (காவல்துறை) புரிந்து கொள்ளாத தால் ஆவணமாக சேர்க்கப்பட்டி ருக்க வேண்டும். அதுவே சித்திக் கப்பான் நிரபராதி என்பதற்கான ஆவ ணமாகும் என்றார் அவரது வழக்க றிஞர். சதித்திட்டம் தொடர்பாக ஏதே னும் வெடிபொருட்கள் கைப்பற்றப பட்டதா என்கிற நீதிபதியின் கேள்  விக்கு இல்லை என்பதே அவர்களது பதிலாக இருந்தது. இந்நிலையில் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் சித்திக் கப்பானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடுவதாக நீதிபதி தெரிவித்  தார். அந்த உத்தரவில் 3 நாட்களுக்  குள் கப்பான் விடுவிக்கப்பட வேண் டும். 6 வாரங்கள் தில்லியில் தங்கி யிருந்து தினமும் காவல் நிலை யத்தில் கையொப்பமிட வேண்டும். அதன்பிறகு கேரளா சென்றால் அங்  குள்ள காவல்நிலையத்தில் கை யொப்பமிட வேண்டும் எனவும்  ஜாமீன் உத்தரவில் தெரிவிக்கப்பட் டுள்ளது என்றார்.  

சீத்தாராம் யெச்சூரி வரவேற்பு

உச்சநீதிமன்றம் கப்பானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதை யும் மிகமிக நீண்ட காலம் சிறையில் இருந்து விடுதலையாவதையும் வர வேற்பதாக சிபிஎம் பொதுச்செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். அனைவருக்கும் கருத்துச் சுதந்தி ரம் உள்ளதை இந்த தீர்ப்பு உறுதிப் படுத்தி இருக்கிறது. எதிர்காலத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கு இந்த  தீர்ப்பு உதவும் எனவும் யெச்சூரி தெரி வித்தார்.