திருவனந்தபுரம் இந்தியாவின் முதல் சூப்பர் மின் தேக்கி உற்பத்தி மையம் கண் ணூரில் செவ்வாயன்று செயல் படத் தொடங்குகிறது. கேரள தொழில் துறையின் கீழ் உள்ள கெல்ட்ரான் உப கரண வளாகத்தில் அமைக்கப்படும் புதிய ஆலை, உலகத் தரம் வாய்ந்த சூப்பர் மின்தேக்கிகளை உள்நாட்டி லேயே தயாரித்து, மின்சார வாகனங் கள் மற்றும் விண்வெளிப் பயணங்கள் உட்பட இந்திய பாதுகாப்புத் துறைக்கு வழங்க முடியும்.
இறக்குமதி செய்யப்பட்ட இயந்தி ரங்கள் நிறுவுதல் உள்ளிட்ட முதல் கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள் ளன. திறக்கப்படவுள்ள இந்த புதிய ஆலை ஒரு நாளைக்கு 2000 சூப்பர் கெப்பாசிட்டர்களை உற்பத்தி செய்யும். இந்த மையத்தை முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைக்கிறார். தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவ் தலைமை வகிக்கிறார்.
அதிக திறன் கொண்ட மின்தேக்கி கள், இருசக்கர வாகனங்கள் முதல் விண்வெளி வாகனங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படு கின்றன. சூப்பர் கெப்பாசிட்டர்கள், பேட்டரிகளை விட மிக வேகமாக சார்ஜ் பெறலாம் மற்றும் விநியோ கிக்கலாம். மின்சார வாகனங்கள், வாகன இயந்திரங்கள், இன்வெர்ட்டர் கள், ஆற்றல் மீட்டர்கள் போன்ற பல சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு தயாரிப்பு சூப்பர் கெப்பாசிட்டர்கள் ஆகும். நாட்டின் பாதுகாப்புத் துறை யில் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் கெல்ட்ரான் நிறுவனத்துடன் இஸ்ரோ, டிஆர்டிஓ மற்றும் சிஎம்இடி ஆகிய நிறுவனங்களும் ஒத்துழைத்து வருகின்றன. இஸ்ரோவின் தொழில் நுட்ப ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ரூ.42 கோடி திட்ட மதிப்பீட்டில் முதல் கட்ட பணிகள் ரூ.18 கோடியி்ல் முடிக்கப் பட்டது. முதற்கட்டமாக ரூ.4 கோடி செல வில் கட்டப்பட்ட உலர் அறைகளும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் உட்பட 11க்கும் மேற்பட்ட இயந்திரங்களும் அடங்கும். நான்காவது ஆண்டில் ஆண்டு வருவாய் ரூ.22 கோடி மற்றும் ஆண்டு லாபம் ரூ.3 கோடி என எதிர் பார்க்கப்படுகிறது. தினசரி உற்பத்தி திறன் 2000 சூப்பர் கெப்பாசிட்டர்களாக இருக்கும். இதன் மூலம், கேசிசிஎல் உலகத்தரம் வாய்ந்த மின்னணு உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
போக்குவரத்து, நுகர்வோர் மின்ன ணுவியல், பாதுகாப்பு உபகரணங்கள், விண்வெளி ஏவுதல் வாகனங்கள் மற்றும் தொழில் துறைகளில் சூப்பர் கெப்பாசிட்டர்களை பயன்படுத்த லாம். சூப்பர் கெப்பாசிட்டர்கள், பேட்டரி களுக்கும் கெப்பாசிட்டர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.