states

img

கேரளத்தில் நிலமற்ற பழங்குடியினருக்கான வன நிலம்

நிலம்பூர், ஜன. 4 - ஆதிவாசி மறுவாழ்வு இயக்கத் தின் மூலம் நிலமற்ற பழங்குடியின ருக்கு பகிர்ந்தளிக்க ஒதுக்கப்பட்ட 107.1164 ஹெக்டேர் வன நிலத்தின் பட்டா வழங்க தயாராக உள்ளது. தகுதி யான 663 பயனாளிகளில் முறையான ஆவணங்கள் சமர்ப்பித்த 561 குடும்பங் களுக்கு குலுக்கல் முறையில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேரளம் மாநிலம் நிலம்பூர் கிராமத்தில் திருக்கைகூத்து பிரிவில் 6.5964 ஹெக்டேர், அகம்பாடம் கிராமத்தில் அத்திக்கல்லில் 11.52 ஹெக்டேர், குரும்பலாங்கோடு கிரா மத்தில் நெல்லிப்பொயில் கொடிரி யில் 89 ஹெக்டேர் நிலம் பட்டியல் பழங்குடியினருக்கு ஒப்படைக்கப் படும். அதை வகை மாற்றம் செய்ய  ஒன்றிய வனம்-சுற்றுச்சூழல் அமைச்ச கத்திடம் அனுமதி பெறப்பட்டது. திருக்கைகூத்து பிரிவில் தலா 10 சென்ட் 131 மனைகளும், அத்திக்கல் பிட் மூன்றில் தலா 20 சென்ட் 63 மனை களும், நெல்லிப்பொயில் கொடிரி பிட் ஒன்றில் தலா 40 சென்ட் 367 மனை களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ் வொரு ப்ளாட்டிலும் 5 சென்ட் வீட்டிற் கான சிறப்பு ஒதுக்கீடாக குறிக்கப் ப்பட்டுள்ளது. நிலத்தில் உள்ள மரங் களை பராமரிப்பதை உறுதி செய்ய வும், நிலம் பெற்ற பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வனம் மற்றும் வேளாண் துறை களுடன் இணைந்து வேளாண் காடு வளர்ப்பு செயல்படுத்தப்படும். வனம், பழங்குடியினர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு நிலம் விநியோகிக்கப்படும். லைப் வீடும் -போஸ்ட்மெட்ரிக் விடுதி  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில்  லைஃப் திட்டத்தின் கீழ் வீடுகள்  கட்டப்படும். பட்டியல் பழங்குடி யினர் மற்றும் உள்ளாட்சித் துறைகள் இணைந்து இதற்கான நடவடிக்கை யை மேற்கொள்ளும். ஒவ்வொரு இடத்திற்கும் மூன்று மீட்டர் பாதை இருக்கும்.