திருவனந்தபுரம், டிச.2- கேரளத் திரையுலகில் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய சிறப்புத் திட்டம் தயாரிக்கப்பட உள்ள தாக என்று கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் சாஜி செரியன் தெரிவித்துள் ளார். இத்திட்டத்தின் கீழ், பட்டியல் வகுப் பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் இயக்கும் இரண்டு திரைப்படங்கள் அரசின் உதவியுடன் தயாரிக்கப்படும். ஒரு படத்துக்கு ரூ. 1.5 கோடி செலவு செய்யப்படும். பெண்கள் இயக்கும் இரண்டு படங்களுக்கும் கூடுதலாக இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். அரசின் புதிய திட்டப்படி, இந்த ஆண்டு தயாரிக்கப்படும் படங்களுக் கான திரைக்கதையை தேர்வு செய்யும் பணி மூன்று கட்டங்களாக மேற்கொள் ளப்பட்டு, தற்போது இறுதி செய்யப் பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களின் அடிப்படையில் அர சுக்கு வந்த விண்ணப்பங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர்களால் ஆய்வு செய்யப்பட் டன.
இதில், பட்டியல் வகுப்பினர் - பட்டி யல் பழங்குடியினர் இயக்குநர்கள் பிரி வில், வி.எஸ். சனோஜின் திரைக்கதை முதல் பரிசையும், அருண் ஜே.மோக னின் வசனம் இரண்டாம் பரிசையும் பெற்றது. பெண் இயக்குநர்கள் பிரிவில் ஸ்ருதி நம்பூதிரி சமர்ப்பித்த டி32 முதல் 46 என்கிற திரைக்கதை முதல் இடத்தைப் பிடித்தது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சினிமா துறையில் உள்ள பிரபலங்க ளின் வழிகாட்டுதலில் திரைக்கதை எழு தும் ஆன்லைன் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட திரைக்கதை களை படமாக்கும் பணிகளும் விரை வில் தொடங்க உள்ளன. இவ்வாறு அமைச்சர் சாஜி செரியன் கூறியுள்ளார்.