states

img

சமத்துவத்திற்கான ஒன்றுபட்ட போராட்டம்

திருவனந்தபுரம், ஜன.7- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்  கத்தின் பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே பேசுகையில், சமத்துவத்திற்கான ஒற்றுமைப் போராட்டம் என்ற முழக் கத்துடன் ஜனநாயக மாதர் சங்கத்தின் 13ஆவது அகில இந்திய மாநாடு திரு வனந்தபுரத்தில் நடக்கிறது. இதில் 96,31, 116 உறுப்பினர்கள் சார்பில் 850 பேர் பங்  கேற்கின்றனர். கேரளத்தில் அகில இந்திய  மாநாடு இது இரண்டாவது முறையாகும். 1986இல் நடந்த திருவனந்தபுரம் மாநாட் டுக்குப் பிறகு இப்போது இங்கே நடத்தப்  படுகிறது என குறிப்பிட்டார். ஆங்கில ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்  பிரபுத்துவத்திற்கு எதிரான பெண்களின் போராட்டங்களாலும் போராளிகளாலும் வளம் பெற்றது கேரள மண். பிரபல முன்  னணி மாதர் சங்கத் தலைவரும், அமைப் பின் நிறுவன பொதுச் செயலாளருமான தோழர் சுசீலா கோபாலனின் நிலம் இது.  நாட்டின் மிகப்பெரியதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான அலகுக்கு சொந்தமானது கேரளம்.

இன்று நாட்டில் உள்ள பெண்கள் மத்தி யில் கோபத்துடன் விரக்தியும் உள்ளது. பெண்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள், கண்ணியமான வாழ்க்கை சாத்தியமாகவில்லை. ஒன்றிய  பாஜக அரசு தங்கள் நிலையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதாக பெண் களும் கொதிப்படைந்துள்ளனர். தங்கள் வாழ்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அவர்கள் விரக்தியும் அச்ச மும் அடைந்துள்ளனர். உயிர் வாழ்வதே பெரும் சவாலாக மாறியுள்ளதால் நெருக் கடி தீவிரமடைந்து வருகிறது. ஒன்றுபட்ட போராட்டங்களைக் கட்டியெழுப்புவதன் மூலமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் பெண்கள் இந்த இயக்கத்திற்கு வருகிறார்கள்.

வாக்குறுதிகளுக்கு துரோகம் வகுப்புவாத குரோதம்

ஒன்றிய பாஜக-ஆர்எஸ்எஸ் அரசு எத்தனை பொய் வாக்குறுதிகளை அளித் துள்ளது? ‘காவலர், நல்ல நாட்கள், ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம், 2 கோடி வேலை, பெண் குழந்தை களைக் காப்பாற்றுங்கள், பெண்களுக்குக் கல்வி கொடுங்கள்’ என்று கூறியதை யெல்லாம் பெண்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். ஏழைகளின் வறுமை யை ஆட்சியாளர்கள் கேலி செய்கிறார் கள். வாக்குறுதிகளின் துரோகத்தை மக்கள் உணரும்போது, பெண்களையும் மக்களையும் வகுப்புவாதமயமாக்கும் ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டு வரு கிறார்கள். கார்ப்பரேட் வகுப்புவாதமே இன்று பாஜக-ஆர்எஸ்எஸ்-இன் முகம். குடும்ப வன்முறை, பெண்களின் வாழ்க்கையை மிகவும் பாதுகாப்பற்றதாக ஆக்கியுள்ளது. ஆணவக் கொலைகள் சாதி மற்றும் ஆணாதிக்கம் எவ்வளவு தீவிர மடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. பாரதிய ஜனதா மாநில அரசுகள், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சாதி மற்றும் மதங்களுக்கு இடையேயான திருமணங்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றியுள்ளன. இணையரை சுயமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்படு கிறது. பெண்கள் இயக்கம் பல ஆண்டு களாக வென்றெடுத்த உரிமைகளைப் பறிக்  கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 2002 குஜராத் இனப்படுகொலையின் தொடர்ச்சியான பில்கிஸ் பானு வழக்கின்  கும்பல் பாலியல் வல்லுறவு செய்தவர்  களையும் படுகொலை செய்தவர்களை யும் விடுவிக்க மோடி அரசின் துணையுடன் பாஜக குஜராத் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவை இருண்ட யுகத்திற்கு இழுக்க நினைக்கும் வகுப்பு வாத மற்றும் மனிதாபிமானமற்ற சக்தி களை பெண்கள் ஒற்றுமையாக தோற்க டிக்க வேண்டும் என்றார்.