states

img

நெருக்கடியில் இருந்து கேஎஸ்ஆர்டிசி மீட்பு

திருவனந்தபுரம், செப். 6- 2016இல் இஜமு அரசு ஆட்சிக்கு வந்தபோது  கேரள மாநில சாலை போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி), கடும் நெருக்கடியில் இருந்தது. ஐஜமு அரசின் கொள்கையால் இந்த  நிலை ஏற்பட்டது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க முடியவில்லை. ஓய்வூதியம் நிறுத்தப் பட்டது. ஓய்வூதியம் கிடைக்காத விரக்தியில் முன்னாள் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். ஒவ்வொரு மாதத்தின் தேவை களும் நிறுவனத்தின் சொத்துக்களின் மீது கடன் வாங்குவதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்டன. கே.டி.டி.எப்.சி (கேரள போக்குவரத்து மேம்பா ட்டு நிதிக் கழகம்), ஹட்கோ, பல்வேறு மாவட்ட கூட்டுறவு வங்கிகள், எல்.ஐ.சி., பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் போன்றவற்றில் இருந்து, எங்கெல்லாம் கடன் வாங்க முடியுமோ அங்கெல்லாம் கடன் வாங்கினர். இந்தக் கடன்கள் 16 சதவிகிதம் வரை வட்டிக்கு எடுக்கப் பட்டன. இந்தக் கடன்கள் அனைத்துமாக ரூ.3,100 கோடி ஆனது. தினசரி வருமானத்தில் இருந்து கடனை திருப்பி வசூலிக்கும் “எஸ்க்ரோ” முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.5 கோடி வருமானத்தில், ரூ.3 கோடி கடன் திருப்பிச் செலுத்தப்பட்டது. எஞ்சிய இரண்டு கோடி ரூபாய் மட்டுமே தலைமை அலு வலகத்திற்கு வந்து சேர்ந்தது. இந்தத் தொகை டீசல் விலைக்குக் கூட போதுமானதாக இல்லை. சம்பளம் மற்றும் ஓய்வூதியம். உதிரி பாகங்கள் மற்றும் டயர்களுக்காக மீண்டும் கடன் வாங்க வேண்டியிருந்தது. எங்கிருந்தும் கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டபோது, ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் டீசல் கடன் வழங்கு வதை நிறுத்திவிட்டன. 2016இல் இஜமு ஆட்சிக்கு வந்தபோது கே.எஸ்.ஆர்.டி.சி.யின் பரிதாப நிலை இதுவாகத்தான் இருந்தது.

சட்டப்பூர்வ ஓய்வூதியம்

1984 ஆம் ஆண்டு கேஎஸ்ஆர்டிசி ஊழியர் களுக்கு சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்கப் பட்டது. நாட்டிலுள்ள வேறு எந்த சாலைப் போக்குவரத்துக் கழகத்திலும் இன்று  வரை சட்டப்பூர்வ ஓய்வூதியம் அமல்படுத்தப்பட வில்லை. ஒன்றிய மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் சட்டப்பூர்வ ஓய்வூதியம் இல்லை. அங்கெல்லாம் வருங்கால வைப்பு நிதி  ஓய்வூதியத் திட்டமே உள்ளது. அது ஒரு சிறிய தொகை. பிஎப் ஓய்வூதியத் திட்டத்தில் தொழிலாளர்கள் செலுத்தும் பங்களிப்புகள் அதில் அடங்கும். ஆனால் கேஎஸ்ஆர்டிசியில் ஓய்வூதியத் திட்டம் அதிலிருந்து வேறுபட்டது. 1984இல் ஓராண்டுக்கு ஓய்வூதியம் வழங்க இரண்டு கோடி ரூபாய் போதுமானதாக இருந்தது. 2016ஆம் ஆண்டு ஓய்வூதியம் வழங்க  நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் தேவைப் பட்டது. வருவாயில் இருந்து இந்தத் தொகையைக் கண்டறிய முடியவில்லை. நிறு வனம் கடனில் சிக்கியதால் 2013 இல் ஓய்வூதி யம் நிறுத்தப்பட்டது. 2014 டிசம்பரில், கேஎஸ்ஆர்டிசி ஊழியர் சங்கம் (சிஐடியு) நடத்திய காலவரையற்ற வேலைநிறுத்தம், ஓய்வூதியப் பொறுப்பில் 50 சதவிகிதத்தை (அதிகபட்சம் ரூ.20 கோடி) அரசே செலுத்தும் என்று முடிவெடுக்கப்பட்டது. நிதி நெருக்கடியில் இருந்த, கே.எஸ்.ஆர்.டி. சி.யால் மீதி தொகையை கண்டுபிடிக்கவோ, ஓய்வூதியத்தை முறையாக வழங்கவோ முடிய வில்லை. ஐஜமு ஆட்சியில் கேஎஸ்ஆர்டிசியின் நிலை இதுதான். இதையெல்லாம் மறந்து விட்டு மறைமுகமாக சில அமைப்புகள் பிரச்சாரம் செய்கின்றன.

இஜமு அரசின் முயற்சிகள்

2016இல் இஜமு அரசு ஆட்சிக்கு வந்தவுடன் கேஎஸ்ஆர்டிசியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புகழ்பெற்ற நிதி நிபுணர் பேரா சிரியர். சுஷில் கன்னா நியமிக்கப்பட்டார். ஆறு  மாதங்களுக்குள் அவர் ஆய்வு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தார். சுஷில் கன்னாவின் அறிக்கை, அரசாங்கம் என்ன செய்ய வேண்டும், நிர்வாகமும் தொழிலாளர்களும் என்ன செய்ய வேண்டும் என்பதை உள்ளடக்கியதாக இருந்தது. பொதுத்துறை வங்கிகளின் கூட்டத்தை நடத்தி அதிக வட்டிக்கு வாங்கிய ரூ.3,100 கோடி கடன் குறைந்த வட்டியில் நீண்ட  கால கடனாக மாற்றப்பட்டது. இதன் காரணமாக ஒரு நாள் கடனை திருப்பி செலுத்தும் தொகை  ரூ.3 கோடியில் இருந்து ரூ.1 கோடியாக குறைந்தது. போக்குவரத்துக் கழகத்துக்கு ஆண்டுக்கு 730 கோடி ரூபாய் பொறுப்பு இந்த ஒரே  நடவடிக்கை மூலம் குறைந்தது. கூட்டுறவு வங்கி களின் கூட்டமைப்பு ஏற்படுத்தி ஓய்வூதியம் வழங்க மாற்று வழி கண்டறியப்பட்டுள்ளது. இந்த கடமையை தற்போது நிறைவேற்றுவது அரசாகும். கே.எஸ்.ஆர்.டி.சி ஊழியர்களுக்கு முழு ஓய்வூதியமும் கேரள வரலாற்றில் முதன்முறையாக அரசே வழங்குகிறது. ஊழி யர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு கடனும், வட்டியும் வழங்கி  வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம், ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய்க்கு அரசு பொறுப் பேற்றுள்ளது. இனி எங்கிருந்தும் கடன் வாங்க வேண்டாம் என்று முடிவு செய்து, ஒவ்வொரு மாதமும் வருவாய்க்கும் செலவிற்கும் உள்ள வித்தியாசத்தை நிதி உதவியாக அரசாங்கம் ஒதுக்குகிறது. 2016க்குப் பிறகு, அரசு கேஎஸ்ஆர்டிசிக்கு நிதி உதவியாக ரூ.7366.4 கோடியும், திட்ட ஒதுக்கீடாக ரூ.87.38 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.7454.02 கோடி வழங்கியுள்ளது. கே.எஸ்.ஆர்.டி.சி.யின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய நிதியுதவியாகும். நாட்டில் வேறு எந்த மாநில அரசும் இதுபோன்ற உதவிகளை எந்த சாலை போக்குவரத்து கழகத்திற்கும் இந்த கால கட்டத்தில் வழங்கவில்லை.

அசாதாரண சூழ்நிலை

கோவிட் தொற்றுநோய் மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளன. தொற்றுநோயின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி மற்றும் வருவாயில் செங்குத்தான வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், செலவு கணிசமாக அதி கரித்துள்ளது.

அரசு உதவி செய்தும் நெருக்கடி க்கு தீர்வுகாண முடியாமல் போனதற்கு இதுவும்  ஒரு காரணம். கன்னா அறிக்கையின்படி, நிர்வாகமும் தொழிலாளர்களும் பரிந்துரைகளை அமல்படுத் தாததும், நெருக்கடியை அதிகரிக்க வழிவகுத் தது. அந்த அறிக்கையில் சுஷில் கன்னா முக்கிய மாக வழிகாட்டியது நிர்வாக அதிகாரிகளின் திறமையை மேம்படுத்த வேண்டும் என்பதாகும். கே.எஸ்.ஆர்.சி நெருக்கடிக்கு தீர்வு காண அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விச யங்களை அரசு செய்தால் மட்டும் போதாது. 2016-17 ஆம் ஆண்டில், ரூ.325 கோடி அரசு  உதவி வழங்கப்பட்டது, கோவிட் நிலைமை யைக் கருத்தில் கொண்டு, 2021-22 ஆம் ஆண்டில், அரசாங்கம் 2076 கோடி ரூபாய் உதவி வழங்கியுள்ளது. அதன்பிறகும் சம்பளத்தை சரியாக கொடுக்க முடியாமல் போனது நிர்வா கச் சீர்கேடால்தான். ஊழியர்கள் ,நிர்வாக மட்ட அதிகாரிகள் இருதரப்பினரும் பணி முறை களில் ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொள்ள வேண்டும். கேஎஸ்ஆர்டிசியின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண அரசு எடுக்கும் நேர்மையான முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்த அனைத்து ஊழியர்களும் நேர்மை யான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கே.எஸ்.ஆர்.டி.சி.யை பொதுத்துறையில் வைத்திருப்பதே அரசின் நோக்கம். இது மிகவும் எளிதானது அல்ல. பொதுத்துறையை அழிக்கும் ஒன்றிய அரசின் கொள்கையை எதிர்கொள் வதன் மூலமே இது வெற்றி பெறும். ஒன்றிய அரசு கொண்டு வந்த ‘மோட்டார் வாகன சட்ட திருத்தத்தாலும்’, டீசல்-எண்ணெய் விலை உயர் வினாலும், ஒட்டுமொத்த போக்குவரத்து துறைக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கேரளா வில் சுமார் அரை லட்சம் தனியார் பேருந்துகள் இயங்கின, ஆனால் தொழில் நெருக்கடி காரணமாக 10,000 பேருந்துகளாக அவை குறைந்தன. ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்றும் முதல்வர் தெளிவுபடுத்தினார்.


 

;