states

img

நவம்பர் 2025-க்குள் தீவிர வறுமையில் இருந்து கேரளம் விடுவிக்கப்படும்!

திருவனந்தபுரம், செப். 29 -   கேரளம், தீவிர வறுமையில் இருந்து ‘2025 நவம்பர்’ மாதத்துக்குள் விடுவிக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி, திருவனந்தபுரத்தில் புதனன்று (செப்.27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பினராயி விஜயன் பேசினார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:  2025 நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் கேரளத்தை தீவிர வறுமையில் இருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் வேகமாக முன்னேறி வருகின்றன. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இலக்கை அடைவதன் மூலம் 93 சத விகித கடும் ஏழைகள் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்படுவார்கள்.  திருவனந்தபுரத்தில் 7,278 குடும்பங் களும், கொல்லத்தில் 4,461 குடும்பங் களும், பத்தனம்திட்டாவில் 2,579 குடும்பங்களும் மிகவும் ஏழ்மையான குடும்பங்களாக அடையாளம் காணப் பட்டுள்ளன.

மண்டல ஆய்வுக் கூட்டங்களுக்காக 14 மாவட்டங்களில் கண்டறியப்பட்ட 265  இல் 241 பிரச்சனைகளுக்கு மாவட்ட அள வில் தீர்வு காணப்பட்டன. மாநில அள வில் 703 பிரச்சனைகள் பரிசீலனைக்கு வந்தன. திருவனந்தபுரத்தில் நடந்த மண்டல ஆய்வுக் கூட்டத்தில் திருவனந்த புரம், கொல்லம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்த செயல்முறை ஜூலை நடுப்பகு தியில் தொடங்கியது. குறிப்பிட்ட காலத்தி ற்குள் சிக்கல்களைத் தீர்ப்பதில் குறிப் பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சியில் கற்றுக்கொண்ட பாட ங்கள் எதிர்காலத்தில் இதேபோன்ற செயல்முறைகளை திறம்பட செயல் படுத்துவதற்கான உத்வேகமாகும். துறைச் செயலர்களின் சிறப்புக் கவனம், பிரச்சனைக்குத் தீர்வு காண பெரிதும் உதவியுள்ளது. மாநிலத்தில் வித்யாகிரணம் திட்டத் தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வரும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில், இன்னும் முடிக்கப்படாதவற்றை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. லைப் பவன் திட்டத்திற்குத் தேவையான நிலத்தைக் கண்டறியும் ‘மனசோடித்திரி மண்’’ பிரச்சாரம், உள்ளாட்சி அமைப்புகள் அடிப்படையில் விரிவுபடுத்தப்படும். கோவளம் பேக்கல் நீர்வழிப்பாதை யின் கட்டுமான முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இத்திட்டம், தடைகளை விரைந்து தீர்த்து, விரைவில் நிறைவேறும். திருவன ந்தபுரம் மாவட்டத்தில் ஐந்து பகுதிகளாக மலைப்பாதை திட்டம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் கடற்கரை நெடுஞ்சாலை 74.2 கி.மீ. இதில் ஒன்றாவது பாலம் முதல் பள்ளித்துறை வரையிலான 21.53 கி.மீ.க்கு 4(1)அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 51.98 கி.மீ.க்கு கல் பதிக்கும் பணியும் நிலம் எடுப்பு பணிகளும் முடிந்துள்ளன. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள 24 நிறுவனங்கள் ஆர்த்ரம் மிஷன் மூலம் குடும்ப நல மையங்களாக மாற்றப் பட்டுள்ளன. 11 சமூக சுகாதார நிலையங் களில் ஒன்று தொகுதி அளவிலான குடும்ப நல மையமாக தரம் உயர்த்தப் பட்டுள்ளது.  பத்தனம்திட்டா மாவட்டத்தில் பொதுக் கல்வித் துறையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக, கிப்பி நிதி ரூ. 5 கோடியில் அறிவிக்கப்பட்ட ஐந்து கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் ஆறு கட்டடங்கள் ரூ. 3 கோடியிலும், ஒரு கட்டடம் ரூ. 1 கோடி நிதியிலும் கட்டி முடிக்கப்பட்டது. ஆய்வுக் கூட்டத்தில், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டன. இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.