states

img

கேரளம் தொட்டறிந்த மக்கள் பாதுகாப்பு அணிவகுப்பு

எம்.வி.கோவிந்தன் பேட்டி

கேரளாவை சிலிர்த்து எழ வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தலைமையிலான  ‘மக்கள் பாதுகாப்பு அணிவகுப்பு’ சனியன்று (மார்ச் 18) திருவனந்தபுரத்தில் நிறைவடைந்தது. அரசியல் விவாதத்தின் தீப்பொறி கிளப்பிய பயணத்தில் பல அற்புதமான அனுபவங்கள் இருந்தன. இந்த அணிவகுப்பை இடதுசாரி இயக்கத்திற்கு மிகவும் சக்திவாய்ந்த கருத்தியல் போராட்டமாக வரலாறு விவரிக்கும். இந்த அணிவகுப்பின் தலைவர் எம்.வி.கோவிந்தன், தேசாபிமானி திருவனந்தபுரம் செய்திப்பிரிவின் தலைவர் தினேஷ்வர்மாவுடன் தனது 26 நாள் பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். தமிழில்: முருகேசன்

அனைத்து தரப்பு மக்களும் அணிவகுப்புக்கு ஒத்து ழைப்பு அளித்தனர். அணிவகுப்பின் நோக்கம் பயனுள்ள தாக அமைந்தது. லட்சக்கணக்கான மக்களுடன் தொடர்பு  கொள்ள முடிந் தது. இது அவர்களை கருத்தியல் ரீதி யாக வலிமையாக்க உதவும். அந்த வலிமை ஒரு தற்காப்பு ஆயுதமாக மாறும் என்பது சிறப்பு அம்சம். நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் கேரளா. இங்கு நவீன உல கிற்கு ஏற்ப, பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு துறையை மாற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், எந்த வளர்ச்சிக் கான சாத்தியம் இருந்தாலும், கேர ளத்தில் அதெல்லாம் வேண்டாம் என் பதுதான் ஒன்றிய அரசின் கொள்கை. வகுப்புவாத அடிப்படையில் பிளவு ஏற்படுத்தி பயன்படுத்திக் கொள்ளும் முயற்சிகளை, மதச்சார்பற்ற நிலைப் பாட்டை எப்போதும் கடைப்பிடித்து வரும் கேரளா எதிர்க்க வேண்டும். இந்த விசயங்கள் மக்களுக்கு நன் றாகவே தெரியும்.

இடது ஜனநாயக முன்னணிக்கும் முதல்வர் பினராயி விஜயன் மீதும் தனிப்பட்ட முறையில் என்னென்ன தாக்குதல்கள்? இதற்கு எதிராக அரசும், முன்னணியும் மட்டுமல்ல, இந்த மக்கள் அனைவரும் முன்வர வேண்டும். அதை அவர்கள் அதிக ஆர்வத்துடன் எடுத்துச் செல்வது தெரிந்தது. வரவேற்பு மையங்களில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் அதைத்தான் நிரூபித்தார்கள். எண்ணிக்கையை முடிவு செய்து இவ்வளவு பேரை வரவழைப்பது என் கிற வழக்கம் போல அல்லாமல் பலர் தாமாகவே அணிவகுப்பை வரவேற்க முன்வந்தனர். ஒவ்வொரு நாளும், அழைப்பாளர்களுடனான கலந்துரை யாடல்கள் மற்றும் வரவேற்புகளில் சிபிஐஎம் அல்லது எல்டிஎப் ஐச் சேர்ந்த வர்கள் மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த வர்கள் கலந்து கொண்டனர். கீழ் மட்டத்தில் ஊழல் உள்ளிட்ட பல புகார் கள் எங்களுக்கு வந்துள்ளன. இது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். கட்சியில் பரிசீலிக்க வேண்டிவை பரிசீலிக்கப்படும்.

பெண்கள் முன்னேற்றம்

வீடு, பட்டா போன்ற பல்வேறு அரசு உதவிகளுக்குத் தகுதியானவர்கள் வந்து குவிந்தனர். அவர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இதெல் லாம் நடக்காது என்று நினைத்து ஏமாந்தவர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி யின் வெளிப்பாடு இது. அவர்கள் வீட்டில் செய்த பல்வேறு பொருட்களு டன் வரவேற்பு மையங்களுக்கு வந்த னர். பழங்குடியினர் மூங்கிலில் சேக ரித்த தேனுடன் வந்தது ஒரு பெரிய அனுபவம். பெண்களின் பங்கேற்பு சிறப்புக் குரியது. அனைத்து வரவேற்பு மையங் களிலும் லட்சக்கணக்கான பெண்கள் கொளுத்தும் வெயிலில் காத்திருந்த னர். ஏராளமான இளைஞர்கள் செம்ப டையில் இணைந்தனர். பெண்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற் றம், ஊடகங்கள் என்னதான் பொய் களை பரப்பினாலும், ஒன்றிய அரசு டன் இணைந்து எதிர்க்கட்சிகள் என்ன தான் தடைகளை கட்டமைத்தாலும் அது பெண்களையும் இளைஞர்களை யும் பாதிக்காது என்பதையே இது காட்டு கிறது.

பகல் கனவுகள்

சிறுபான்மையினரின் அவல நிலை குறித்து, பிப்ரவரி 19 அன்று புதுதில்லியில் நடந்த கிறிஸ்தவர்க ளின் போராட்டம் உட்பட இந்த அணி வகுப்பு நீண்ட நேரம் பேசியது. 21 மாநி லங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதி ராக  பெரிய தாக்குதல்கள் நடந்துள் ளன. 598 மையத்தில் வன்முறை நடந்திருப்பதாக அவர்கள் மனுவாக எழுதிக் கொடுத்தனர். சத்தீஸ்கரில் இருந்து ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் வெளியேறினர். பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஆயிரக்கணக் கானோர் மத்தியில் நடக்கச் செய்தனர். இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கும் மக்களை கவர்ந்து வாக்குகளை பெற்றுவிடுவோம் என்பது அமித்ஷாவின் நப்பாசை மட்டுமே. இன்னொருவர் (நடிகர் சுரேஷ் கோபி) திருச்சூரையும் கண் ணூரையும் கைப்பற்றுவோம் என்கிறார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் சிறுபான் மை வகுப்புவாதிகள் மூன்று பெரிய சர்வதேச மதங்கள் இணைந்து வாழும் நாட்டில் விஷம் கலக்க முயற் சிக்கின்றனர். வகுப்புவாதிகளின் போலித்தனமும் அம்பலமானது. திரிபுராவில் ஆயிரக்கணக்கான வீடு கள் மற்றும் மாட்டு கொட்டகைகளுக்கு பசு பிரியர்கள் தீ வைத்தனர். நூற்றுக் கணக்கான மாடுகள் இறந்தன. காத லர் தினத்தன்று பசுவைக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று சொன்னவர்கள், பின்னாளில் அதை வாபஸ் பெற நேர்ந் தது. ஒரு வகுப்புவாதிக்கு நம்பிக்கை இருப்பதில்லை, உண்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவர் வகுப்புவாதி யாக இருக்க முடியாது என்றார்.

 

;