states

img

கேரள போலீஸ் சட்ட திருத்தம் நிறுத்தி வைப்பு.... சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும்: முதல்வர்....

திருவனந்தபுரம்:
புதிய போலீஸ் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த விரும்பவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக சட்டமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்படும் என்றும், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டபின் இது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளார்.முதல்வரின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: தனிநபரின் சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பின் கவுரவத்தை கேள்விக்குட்படுத்த சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்கள் பரவலாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சியாக கேரளபோலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அவதூறு, பொய்யான மற்றும் ஆபாசமான பிரச்சாரங்களுக்கு எதிராக சமூகத்தின்பல்வேறு பிரிவுகளிடமிருந்து விமர்சனங்கள் மற்றும் புகார்கள் உள்ளன.பெண்கள் மற்றும்திருநங்கைகள் மீதான இடைவிடாத தாக்குதல்கள் சமூகத்தில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. குடும்ப உறவுகளைக் கூட பாதித்த அனுபவங்கள் இருந்தன. பாதிக்கப்பட்டவர்களை தற்கொலைக்கு இட்டுச் சென்றன.இதற்கு எதிராக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஊடகத் தலைவர்கள் பலர் கோரினர். இந்தச்சூழலில்தான் போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்ய முன்மொழியப்பட்டது.திருத்தத்தின் அறிவிப்பு வந்த உடன், வெவ்வேறு பகுதிகளிலிருந்து வெவ்வேறு கருத்துக்கள் எழுந்தன.இடது ஜனநாயக முன்னணியை ஆதரிப்பவர்களும், ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காக நிற்பவர்களும்கவலை தெரிவித்துள்ளனர்.இந்த சூழ்நிலை யில் சட்டதிருத்தத்தை அமல்படுத்த விரும்பவில்லை. இது தொடர்பாக விரிவானகலந்துரையாடல் சட்டமன்றத்தில் நடைபெறும், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்ட பின்னர் இது தொடர்பாக மேலும்நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சமூக ஊடகங்களின் மூலமாகவும் அதல்லாமலும், தனிநபர் சுதந்திரம் மற்றும் மனிதநேயத்தின் சாராம்சத்துடன் ஒத்துப் போகாத பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள்,  அதிலிருந்து விலகி நிற்க வேண்டும் எனவும், சமூகம் முழுவதும் இந்த விஷயத்தில்  விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.