states

img

கேரள உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்டத்தில் 76.38 சதவிகித வாக்குப்பதிவு... நாளை இறுதி கட்டம்....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் ஜனநாயகத்தின் கொண்டாட்டமாக மாறியுள்ள உள்ளாட்சித் தேர்தலின் ஐந்து மாவட்டங்களில் 76.38  சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. வயநாடு மாவட்டத்தில் அதிகபட்சமாக - 79.46 சதவிகிதமும் பாலக் காடு - 77.97, எர்ணாகுளம் - 77.13, திருச்சூர் - 75.03, மிக குறைவாக கோட்டயத்தில் - 73.91 சதவிகிதமும் வாக்கு பதிவாகியுள்ளது. திங்களன்று இறுதியாக மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறஉள்ளது.

அதே நேரத்தில், மாநகராட்சிகளில் வாக்குப்பதிவு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. கொச்சி மாநகராட்சியில் - 62.01 சதவிகிதமும், திரிசூரில் - 63.77 சதவிகிதம் வாக்காளர்களும் தங்களது உரிமையைப் பயன்படுத்தினர். பலஇடங்களில், வாக்குப்பதிவு நேரத்தின் முடிவில் நீண்ட வரிசையைக் காண முடிந்தது. கோவிட் நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் பிபிஇ உடைகளை அணிந்து மாலையில் வாக்களிக்க வந்தனர்.முதல் கட்ட தேர்தல் நடந்த ஐந்து மாவட்டங்களின் வாக்குப்பதிவு 73.12 சதவிகிதமாக இருந்தது. இறுதிக் கட்டத்தில் காசர்கோடு, கண் ணூர், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் திங்களன்று (டிச.14) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கை 16 ஆம் தேதி நடைபெறும்.