கொச்சி, ஜுன் 3- கேரளத்தில் புதிய கல்வியாண்டில் 39.95 லட்சம் மாணவ-மாணவிகள் பள்ளிக் கூடங்களில் படிக்க உள்ளதாக பொதுக் கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி தெரி வித்தார். இதுகுறித்து செய்தியாளர் கூட்ட த்தில் அமைச்சர் மேலும் கூறியதாவது:
முன் தொடக்கப்பள்ளிகளில் 1,34,763 மாணவ-மாணவிகள், தொடக்கப்பள்ளி களில் 11,59,652, தொடக்க மேல்நிலைப் (நடு நிலை) பள்ளிகளில் 10,79,019, உயர்நிலைப் பள்ளிகளில் 12,09,882, மேல்நிலைப் பள்ளி களில் முதலாமாண்டு 3,83,515, மேல்நிலைப் பள்ளிகளில் இரண்டாமாண்டு 3,83,515, மேல்நிலை தொழிற்கல்விப் பிரிவில் 28,113 மாணவ-மாணவிகள் உள்ளனர். அரசுப் பள்ளி களில் 11,19,380 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 20,30,091 பேரும் உள்ளனர்,
உதவி பெறாத (தனியார்) பள்ளிகளில் 2,99,082 பேரும் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மேல்நிலை மற்றும் தொழிற்கல்வி மேல்நிலை முதலாம் ஆண்டு சேர்க்கை தொடங்கியது. 24ஆம் தேதி வகுப்புகள் துவங்கும். மாநிலத்தில் உள்ள கல்லூரி களில் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜுன் 3 திங்களன்று தொடங்கும். இன்னும் 1, 5, 8 வகுப்புகளில் சேருவதற்கான மாணவ -மாணவிகள் உள்ளனர். எனவே, ஒன்று முதல் பத்து வரையிலான மொத்த குழந்தை களின் எண்ணிக்கை இரண்டாவது வாரத்தில் மட்டுமே கிடைக்கும். உயர்நிலை உட்பட மொத்த மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை மாத இறுதியில் மட்டுமே கிடைக்கும்.
முதல் வகுப்பில் இதுவரை 2,44,646 குழந்தைகள் சேர்ந்துள்ளனர். கல்வியாண்டு தொடங்கும் முன் ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ண றிவு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்ட தாக அமைச்சர் கூறினார். அங்கீகரிக்கப்படாத பெற்றோர் ஆசிரியர் சங்க வசூல் அனுமதிக்கப்படாது. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பிடிஏ உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டிய தில்லை. அரசுப் பள்ளிகளில் சேரும் சிறா ருக்கு மாற்றுச்சான்று தேவையில்லை. சட்ட விரோதமாக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகரிக்கப் ப்பட்ட பள்ளிகள் மட்டுமே செயல்பட முடியும் என்று அமைச்சர் கூறினார்.