states

விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி என தீர்ப்பு

திருவனந்தபுரம், மே 23-  கேரளாவில் வரதட்ச ணை கொடுமையால் தற் கொலை செய்துகொண்ட விஸ்மயா வழக்கில் அவரது கணவர் கிரண்குமார் முக்கிய குற்றவாளி என கொல்லம் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  கொல்லத்தைச் சேர்ந்த  22 வயது ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயா என்ற இளம்பெண், திருமணத்தின்போது வர தட்சணையாக 100 சவரன் நகை, ஒரு ஏக்கர் நிலம், ரூ.10  லட்சம் மதிப்புள்ள கார் என அத்தனையும் கொடுத்த பிறகும், வரதட்சணை எனக்கு போதாது எனக் கூறி,  அவரது கணவர் வரதட்ச ணைக் கொடுமை செய்ததால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தூக்கிட்டு தற் கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக கேரள மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து முறையாக வழக்குப் பதிவு செய்தது.  இதைத்தொடர்ந்து கிரண்குமாரை காவல்துறை யினர் கைது செய்தனர்.  மேலும் விஸ்மயாவை தான் அடித்துத் துன்புறுத்தி யதை அவர் ஒப்புக்கொண் டார். இதனால், வரதட்சணை கொடுமையால்தான் விஸ்மயா தற்கொலை செய்து கொண்டதாக கிரண் குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.  இந்த நிலையில், வழக்கு விசாரணை நிறைவடைந்து கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசார ணைக்கு வந்தது. அப்போது  விஸ்மயா கணவர் கிரண் குமார் குற்றவாளி என அதி ரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.  இதனால், ஜாமீனில் உள்ள கிரணை கைது செய் வதற்கான நடவடிக்கை  விரைவில் நடைபெறவுள் ளது. மேலும் அவருக்கான தண்டனை விவரங்கள் செவ் வாயன்று அறிவிக்கப்படும் என கேரள நீதிமன்றம் தெரி வித்துள்ளது.