states

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் சுசீலா கோபாலன் நினைவுநாள்....

1929ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் நாள் கேரள மாநிலம் ஆலப்புழாவில் முஹம்மா எனுமிடத்தில் பிறந்தவர் தோழர் சுசீலா கோபாலன். இவரது குடும்பம் முஹம்மாவில் சீரப்பஞ்சிரா என்றழைக்கப்பட்ட களரி குடும்பமாகும்.இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றிய தலைவராகவும், பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமாகவும் திகழ்ந்தார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவராகவும் சிறப்பாகச் செயல்பட்டார். இ.கே.நாயனார் தலைமையிலான கேரள மாநில அமைச்சரவையில் தொழில்துறை மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார். மேலும் இவர் ஆலப்புழா (1980) மற்றும் சிறயின் கீழ் (1991) ஆகியவற்றிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ.கே. கோபாலனை 1952ல் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு லைலா எனும் மகள் உண்டு.தோழர் சுசீலா கோபாலன் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் நாள் மறைந்தார்.

===பெரணமல்லூர் சேகரன்===

;