states

img

திருவனந்தபுரம் மேயராக ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்பு...

திருவனந்தபுரம்:
கேரளத்தில் இடதுஜனநாயக  முன்னணியின் கவுன்சிலரான ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயரானார். ஆர்யா 54 வாக்குகளுடன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மொத்தம் 99 உறுப்பினர்களில், ஒரு வாக்கு தவறானது. ஒரு உறுப்பினர் கோவிட் தனிமைப்படுத்தலில் இருந்ததால் வாக்களிக்க முடியவில்லை. ஆர்யா ராஜேந்திரன் (எல்டிஎப்) - 54, சிமி ஜோதிஷ் (என்டிஏ) - 35, மேரி புஷ்பம் (யுடிஎஃப்) – 09 வாக்குகளை பெற்றனர். முடவன்முகள் வார்டில் இருந்து இருபத்தொரு வயது ஆர்யா ராஜேந்திரன் மாநகராட்சி உறுப்பினராக 549 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் பாலர் சங்க மாநிலத் தலைவரும், எஸ்எப்ஐ மாநிலக் குழு உறுப்பினருமாவார். நாட்டிலேயே மேயர் பதவியை பிடித்த இளைய நபர் என்கிற பெருமை ஆர்யா ராஜேந்திரனுக்கு கிடைத்துள்ளது. ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் பிஎஸ்சி கணித மாணவியான ஆர்யா, சிபிஎம் கேசவ்தேவ் சாலை கிளை உறுப்பினர். இவரது தந்தை ராஜேந்திரன் எலக்ட்ரீசியன், தாயார் ஸ்ரீலதா எல்ஐசி முகவர். மாலையில் நடந்த துணை மேயர் தேர்தலில் எல்டிஎப் வேட்பாளர் பி.கே.ராஜு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 55 ஓட்டுகள் கிடைத்தன.

;