states

கேரளத்தின் பத்து பொதுத்துறை நிறுவன தலைவர்கள் நியமனம்

திருவனந்தபுரம், டிச.9- கேரள தொழில் துறையின் கீழ் உள்ள மேலும் 10 பொதுத்துறை நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஎம் கேரள மாநிலக் குழு உறுப்பினர் டி.வி. ராஜேஷ் கேரள க்ளாஸ் அண்ட் செராமிக்ஸ் (கேசிசி பிஎல்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கண்ணூர் கூட்டுறவு நூற்பாலைகள் தலைவராக சிபிஎம் கண்ணூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.பிர காஷன், கைத்தறி வளர்ச்சிக் கழகம் - சிபிஎம் கண்ணூர் மாவட்டச் செயலாளர் டி.கே.கோவிந் தன், முந்திரி வளர்ச்சிக் கழகம்- சிபிஎம் கொல்லம் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெயமோகன். மாநில முந்திரி தொழிலாளர்கள் அபெக்ஸ் தொழில் கூட்டுறவு சங்கம் (கேபெக்ஸ்) - எம்.சிவசங்கரப்பிள்ளை கொல்லம் மாவட்டச் செய லாளர், ஆலப்புழா கூட்டுறவு நூற்பாலை-கே.மகேந்திரன் ஆலப்புழா மாவட்டச் செயலாளர், தென்னை நார் இயந்திர உற்பத்தி நிறுவனம் லிமிடெட்- எம்.எச்.ரஷீத் ஆலப்புழா மாவட்ட குழு உறுப்பினர், கேரள மாநில கயர் கார்ப்பரேஷன் - ஜி.வேணுகோபால் ஆலப்புழா மாவட்டச் செயலா ளர், ஆலுவா பாரஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் திரு விதாங்கூர் (எப்ஐடி) ஆர். அனில்குமார் சிபிஎம் எர்ணாகுளம் மாவட்டக் குழு உறுப்பினர். கேரள கைவினைஞர்கள் மேம்பாட்டுக் கழகம்- நெடுவத்தூர் சுந்தரேசன் சிபிஎம் நெடுவத்தூர் பகுதிக் குழு உறுப்பினர்.

;