states

img

மோடியின் கரசேவகர்களாக மாறிய ஏஜென்சிகள்....மத்திய அரசே மறுக்க முடியாத கேரள வளர்ச்சி... ஏ.விஜயராகவன் பேச்சு

திருவனந்தபுரம்:
கேரளத்தின் எல்டிஎப்அரசை  வேறுபடுத்துவது வளர்ச்சிதான் என்றும், வளர்ச்சியைப் பொறுத்தவரை மத்தியஅரசு கூட கேரளாவை அங்கீகரித்துள்ளது. ஆனால்  மத்தியவிசாரணை முகமைகள் மோடியின் கரசேவகர்களாக தங்களை சுருக்கிகொண்டுள்ளதாகவும் சிபிஎம் மாநிலசெய லாளர் ஏ. விஜயராகவன் தெரிவித்தார்.

கேரள வளர்ச்சிக்கு எதிரான மத்தியவிசாரணை முகமைகளின் அணுகுமுறை களை கைவிட வலியுறுத்தி புதனன்று திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: கேரளஅரசு சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறது. உம்மன்சாண்டியின் காலத்தில் என்ன வளர்ச்சி ஏற்பட்டது?. மத்திய பாஜகஅரசு நாட்டை பொருளாதாரச் சரிவுக்கு இட்டுச்சென்றது. நாட்டின் வளர்ச்சி தேக்க மடைந்துள்ளது. அனைத்து வளர்ச்சியும் தேக்கமடைந்துள்ளது. ஏகபோக முதலாளிகள் வளர வேண்டும் என்பதே மத்தியஅரசின் நோக்கம்.அவர்கள் வகுப்புவாதத்தைத் தவிரவேறு எதுவும் செய்யவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்கள் மதத்தைச் சேராதவர்களை எதிரிகளாக  அறிவிப்பது, இந்தியாவுக்கு உலகின் பார்வையில் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் நல்லாட்சியை கவிழ்க்க காங்கிரஸ் மற்றும் பாஜகவின் போராட்டம் தோல்வி யடைந்தபோது அதை வழிநடத்திய மத்தியஅரசாங்கம் புதிய கரசேவாக்களை (விசாரணைமுகமைகள்)கொண்டு வந்துள்ளது. அமலாக்க இயக்குநரகம்,  சிபிஐ, என்ஐஏ போன்றவை மோடியின் கரசேவகர்களாக சுருங்கிவிட்டன. கேரளா அதற்கு பலியாக முடியாது. 

டைட்டானியத்திலிருந்து கோடிக்கணக்கான பணத்தை உம்மன்சாண்டியின் அமைச்சர்கள் கபளீகரம் செய்தனர். அதை விசாரிக்க சிபிஐ வந்ததா? கேரளஅரசு கேட்டுக் கொண்டபிறகும் வரவில்லை. ஆனால்இங்கே ஒரு காங்கிரஸ்எம்.எல்.ஏ .கடிதம்அனுப்பியதும் அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டார்கள். அதுதனது அதிகாரஎல்லைக்கு அப்பாற்பட்டது என்று உயர்நீதிமன்றம் கூறியது. காங்கிரசும் பாஜகவும் நண்பர்கள் என்பது இப்போது தெளிவாகிவிட்டது என்று விஜயராகவன் கூறினார்.