கொச்சி, மே 16- கொச்சியின் புதிய அடையாளமாக பிரம்மாண்டமான புதிய கிரேன் ஒன்று கப்பல் கட்டும் தளத்தில் உயர்ந்து வருகிறது. ஹூண்டாய் சம்ஹோ ஹெவி இண்டஸ்ட்ரீஸ் என்ற கொரிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கேன்ட்ரி கிரேன் நிறுவப்படுகிறது.
கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்ப் பதற்காக கொச்சியை உலகளாவிய மையமாக மாற்றுவதற்காக கப்பல் கட்டும் புதிய உலர் தளத்தில் இந்த கிரேன் அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமான செலவு ரூ.185 கோடி. இது 600 டன் எடை கொண்ட பெரிய கப்பல்களின் மேலோட்டத்திற்கு கனரக இயந்திரங் களை தூக்கும் திறன் கொண்டது. கடந்த ஆண்டு அக்டோபரில் கொச்சி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கிரேன், 6 மாதங்களாக பொருத்தி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் 60 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன.
தற்போது இரண்டு உலர் தளத்தில் தலா 300 டன் மற்றும் 150 டன் எடை யுள்ள கிரேன்கள் உள்ளன. வேம்பநாடு காயல் கரையோரத்தில் கப்பல் கட்டும் தளத்தை ஒட்டியுள்ள 15 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய உலர்தளம் கட்டப் பட்டு வருகிறது.
இதுகுறித்து கப்பல் கட்டும் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கான்கிரீட் தூண், பாதுகாப்புச் சுவர், கரையில் இருந்து கப்பல்துறைக்கு கேட் அமைக்கும் பணி நடந்து வரு கிறது. 130 மீட்டர் நீளம், 75 மீட்டர் அக லம், 13 மீட்டர் ஆழம் கொண்ட உலர்தளம், நவீன அமைப்புகளுடன் நிர்மாணிக்கப் படவுள்ளது. நாட்டிலேயே இரண்டாவ தாகவும், பொதுத் துறையில் முதலாவ தாகவும் இத்தளம் அமையும். ரூ.1799 கோடி முதலீட்டில் இந்த திட்டம் 100 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டில், உலர் தளம் கட்டுமானத்தை முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த ஜனவரியில் பிரதமர் இந்த திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித் தார். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொச்சிக்கு மிகப்பெரிய கப்பல் கட்ட ஆர்டர்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கடற்படையின் இரண்டாவது உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விஷால் கட்டுமானப் பணிகள் இங்கு நடைபெறலாம் என கருதப்படுகிறது. உலர் தளம் (டிரைடாக்) பெரிய எல்என்ஜி கேரியர்கள், எண்ணெய் துரப்பண கருவிகள் (ரிக்) மற்றும் பெரிய கப்பல்களுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.