திருவனந்தபுரம், ஆக.6- திருவனந்தபுரம் கரவாரத்தைச் சேர்ந்த 50 பாஜகவினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். கர வாரம் பஞ்சாயத்தில் பாஜகவின் ஊழல் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். பஞ்சாயத்து ஊழலுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத் திய போராட்டத்தின் கடைசி நாளில் பாஜகவை கைவிட்டு சிபிஎம்-இல் இணைந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆனாவூர் நாகப் பன் போராட்டத்தின் நிறைவு கூட் டத்தை துவக்கி வைத்தார். அப்போது கரவாரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பிஜூகர்ணகி தலைமையில் பா.ஜ.க.வில் இருந்து வெளியேறிய சுமார் ஐம்பது தொண்டர்களை ஆனாவூர் வரவேற்றார்.