அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரின் நடந்த பேரணியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பங்கேற்றார். அதில், ”எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதை அடுத்து, மோடி என்ற குடும்ப பெயரை மையப்படுத்தி ராகுல் அவதூறாகப் பேசியது தொடர்பாக குஜராத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சூரத் நீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு குஜராத் உயர் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.