பாஜக கர்நாடக மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீல். உடுப்பி கிருஷ்ணாமடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு கோபூஜை நடத்தி,பசுக்களுக்கு பழம் கொடுத்துள்ளார். அப்போது, ஒருபசுமாடு, நளின்குமாரின் கட்டீலின் கட்டை விரலை அழுத்தமாக கடித்து வைக்கவே, கட்டீல் வலியால் கதறித் துடித்துள்ளார். நல்லவேளையாக உடனிருந்தவர்கள், அவரைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றுள்ளனர்.