states

img

பிரஜ்வால் ரேவண்ணா கடுமையாக தண்டிக்கப்பட்டாக வேண்டும்!

பெங்களூரு, மே 31 - நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், தம்மிடம் உதவி கேட்டு வந்த நூற்றுக்கணக் கான பெண்களை மிரட்டி பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளா க்கிய பிரஜ்வால்  ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ள நிலை யில், அவர் கடுமையாக தண்டிக்க ப்பட வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை

கர்நாடக மாநிலம், ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா  தளம் கட்சியின் எம்.பி.யான  பிரஜ்வால்  ரேவண்ணா தொடர்பு டைய ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. தம்மிடம் உதவி கேட்டு வந்த பெண்களை மிரட்டி பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கியதும், அதை  3,000-க்கும் அதிகமான எண்ணி க்கையில் வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதும் வெளிச்சத் திற்கு வந்தது.

வெளிநாட்டிற்குத் தப்பியோட்டம்

தனது குற்றங்கள் வெளிப் பட்டவுடன், பிரஜ்வால் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்று, சுமார் 1 மாதத்திற்கும் மேலாக தலை மறைவாக இருந்து வந்தார். அதா வது, ஹசன் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரஜ்வால்  ரேவண்ணா, மக்க ளவைத் தேர்தல் முடிந்த மறுநாள் கடந்த ஏப்ரல் 27 அன்று ஜெர்ம னிக்குத் தப்பிச் சென்றார். அங்கே, அதிகாரமான புள்ளி ஒருவரின் பாதுகாப்பில் இருந்ததாக ஊடக ங்களில் செய்திகள் வெளியாகின.

இண்டர்போல் மூலம் புளூ கார்னர் நோட்டீஸ்

கர்நாடக மாநிலத்தின் சிறப்பு புலனாய்வு குழு (Special Investigation Team) வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல் கேட்டு இண்டர் போல் ஏற்கெனவே ‘புளூ கார்னர் நோட்டீஸ்’ பிறப்பித்தது. இவ் வாறு சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த விண்ணப்ப த்தைத் தொடர்ந்து, மக்கள் பிரதி நிதிகளுக்கான (பிரஜ்வால் ரே வண்ணா எம்.பி.யாக இருப்ப தால்) சிறப்பு நீதிமன்றம் கடந்த மே  18 அன்று அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. மேலும், அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்யு மாறு காங்கிரஸ் தலைமையி லான கர்நாடக அரசு, ஒன்றிய அரசை வலியுறுத்தியது. 

சரணடைவதாக  பிரஜ்வால்  அறிவிப்பு

முன்னதாக, மே 28 அன்று சமூக வலைத்தளங்களில் வீடியோ  ஒன்றை பதிவிட்டிருந்த பிரஜ்வால் ரேவண்ணா, மே 31 அன்று நாடு திரும்புவதாகவும், அதனைத் தொடர்ந்து சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராவேன் என்றும் தெரிவித்திருந்தார். 

அதன்படி, வெளிநாட்டில் ஒரு மாதத் தலைமறைவுக்குப் பின், வியாழனன்று ஜெர்மனின் முனிச்  நகரிலிருந்து புறப்பட்டு வெள்ளி யன்று (மே 31) அதிகாலை 1.30 மணியளவில் பெங்களூரு விமான நிலையம் வந்தடைந்தார்.

6 நாட்கள் போலீஸ் காவல்

அங்கு அவருக்காக காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு  போலீசார் பிரஜ்வால்  ரே வண்ணாவைக் கைது செய்து,  விசாரணைக்காக அலுவல கத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக அவருக்கு மருத்து வப் பரிசோதனையும் செய்யப் பட்டது. பின்னர் அவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். 

அப்போது, பிரஜ்வால்  சார்பில் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் பிரஜ்வால்  ரேவண்ணாவை 6  நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இதை யடுத்து, கர்நாடக சிறப்புப் புல னாய்வுப் பிரிவு போலீசார், பிரஜ்வால்  ரேவண்ணாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுபாஷினி அலி  தலைமையில் பேரணி

முன்னதாக, பாலியல் வல்லு றவு மற்றும் பாலியல் சித்ரவதை களில் ஈடுபட்ட பிரஜ்வால் ரேவ ண்ணாவை கைது செய்யக்கோரி யும், அவருக்கு உறுதியான தண்டனை பெற்றுத்தர வலி யுறுத்தியும், வியாழனன்று ஆயிரக்கணக்கான மக்கள் கர்நாடகாவின் ஹசன் வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

கர்நாடக மாநில மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்த பேரணிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் சுபாஷினி அலி தலைமை வகித்தார். மாதர் சங்கம் உட்பட மாநிலம் முழுவதி லுமிருந்து, 120 அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் எழுத்தாளர்கள் டு.சரஸ்வதி, எஸ்.ஜி. சித்தராமையா, சபிஹா பூமி கவுடா, பானு முஷ்தாக் மற்றும் மாவல்லி சங்கர் உட்பட ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிஐடியு மாநி லத் தலைவர் எஸ். வரலட்சுமி தலைமையில் மாநிலம் முழு வதும் இருந்து ஆயிரக்கணக் கான மதிய உணவு பணியாளர் கள் மற்றும் அங்கன்வாடி பணி யாளர்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.

சிறைத் தண்டனையை  உறுதி செய்ய வேண்டும்

பேரணி நிறைவாக நடை பெற்ற கண்டனக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஹாசன் மாவட்டச் செயலா ளர் தர்மேஷ் பேசுகையில், “பிரஜ்வால்  ரேவண்ணா மட்டு மன்றி சம்பந்தப்பட்ட அனைவரை யும் கைது செய்வதுதான் இந்த போராட்டத்தின் மிகப்பெரிய கோரிக்கை. மேலும், இந்த குற்ற வாளிகளுக்கு வழங்கப்பட வேண் டியது சிறைத்தண்டனை தானே தவிர, ஜாமீன் இல்லை” என்று உரத்து முழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்; அவர் கள் தொடர்பான வீடியோக்களை சமூக ஊடகத் தளங்களிலிருந்து நீக்க வேண்டும்; அரசும் பாதிக்கப்பட்ட பெண்களின் தனி யுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று  கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன.