states

img

ஐயப்ப பக்தர்களுக்கு பஜனை விழாவுடன் விருந்தளித்த இஸ்லாமியர்

அரசியல் ஆதாயத்திற்காக இந்து - முஸ்லிம் மக்கள் இடையே பாஜக பிரிவி னையை தூண்டி வரும் நிலையில்,  கர்நாடகாவில் இஸ்லாமியர் ஒரு வர் ஐயப்ப பக்தர்களுக்கு தனது  வீட்டில் விருந்தளித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங் கேறியுள்ளது.  

வடக்கு கர்நாடகத்தின் முக் கிய நகரமான கொப்பல் நகரின் ஜெயநகர் பகுதியில் வசிப்பவர் காஷிம் அலி. இவர் தனது இல் லத்திற்கு நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்களை அழைத்து  பஜனைகள் மற்றும் வழிபாடுகளு டன், ஐயப்ப பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கினார். இதில் சுவா ரஸ்யமான சம்பவம் என்னவென் றால் காஷிம் அலியின் குடும்பத்தி னரும் பஜனைகளை பாடி அவர்  களுடன் இணைந்து அன்னதானம் உண்டுள்ளனர். இ

ந்நிகழ்ச்சிக்  குப் பின்னர் செய்தியாளர்களி டம் காஷிம் அலி கூறுகையில், “அனைத்து மதங்களும் ஒன்று தான். எல்லா மதங்களின் சாரத்தை யும் ஒருவர் அறிந்துகொள்ள வேண்டும்” எனக் கூறினார்.  குடகு மாவட்டத்திலும்.. கர்நாடகாவின் குடகு மாவட் டத்தில் சபரிமலை கோவிலுக்குச் சென்ற வட கர்நாடகாவைச் சேர்ந்த 6 பக்தர்கள் வனவிலங்கு தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி முஸ்லிம் மக்கள் மசூதியில் தங்க அனுமதி வழங்கி உணவு அளித்து தேவை யான வசதிகளுடன் மீண்டும் சபரி மலைக்கு அனுப்பி வைத்துள்ள  சம்பவமும் அரங்கேறியுள்ளது.

மேற்கூறிய இரண்டு சம்பவங்க ளும் சமூகவலைதளங்களில் டாப்  டிரெண்டிங்கில் வைரலாகி வரு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.