states

img

மசூதிக்கு வெளியே மத கலவரத்தைத் தூண்டும் பாடல் - நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு

கர்நாடக மாநிலம் குல்பர்காவில், மசூதிக்கு வெளியே மத கலவரத்தைத் தூண்டும் வகையில் பாடல் ஒலிக்கச் செய்ததால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிப்பு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் குல்பர்காவில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி விநாயக சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, மெஹ்பஸ் மசூதி அருகே வந்த போது, மசூதிக்கு வெளியே மத கலவரத்தைத் தூண்டும் வகையில், ”இந்த நிலத்தை இரத்தத்தால் நனைப்போம், உங்கள் இடத்தைக் காட்டுவோம்” என்ற பாடல் வரிகளைக் கொண்ட பாடலை ஒலித்து, 100க்கும் மேற்பட்டோர் நடனம் ஆடினர். இது தொடர்பான வீடியோ டிவிட்டரில் அதிகம் பகிரப்பட்டது. டிவிட்டரில் இதற்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பாஜக தலைவர் சந்து பாட்டில் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

;