புவனேஸ்வர் விமான நிலையத்தில் பயணி ஒருவர் தனது உடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.20,14,000 மதிப்புள்ள தங்கத்தை விமான சோதனை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் வியாழக்கிழமை அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிராம் தங்கத்துடன் பயணிகளை கைது செய்திருந்தனர். வெள்ளியன்று மாலை 3:33 மணியளவில் ஏ.ஜைனுலப்தீன் என்ற பயணிகளிடமிருந்து தங்கம் மீட்கப்பட்டது. ஜைனுலப்தீன் சென்னை விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாக புவனேஸ்வர் விமான நிலைய அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது, சென்சார் பகுதிக்குள் சென்று வந்த பயணியிடம் உடலில் எதுவோ ஒன்று இருப்பது தெரியவந்தது. பின்னர் பரிசோதித்த போது ஒன்றும் கிடைக்கவில்லை. மீண்டும் கையில் வைத்திருந்த மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி சோதனையிட்ட பொழுது, தங்கம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவரது கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் தங்கம் கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். அவரது வயிற்றுப்பகுதியில், நான்கு செவ்வக துண்டுகள் அளவுள்ள 400 கிராம் தங்கத்தின் தோராயமான மதிப்பு ரூ .20, 4,000 தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.