states

img

உத்திர பிரதேசத்தில் ரூ.200 தர மறுத்த இளைஞர் சுட்டுக்கொலை 

உத்திர பிரதேசத்தில் ரூ.200 தர மறுத்த இளைஞர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
உத்திரபிரதேச மாநிலம் அலிகா் ஷம்சத் சந்தைப் பகுதியில் வாகன சக்கரம் பழுதுபார்க்கும் கடை வைத்திருப்பவா் அன்சாா் அகமது (30). இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. கடந்த சனிக்கிழமை அதேபகுதியைச் சோ்ந்த ஆசிஃப் என்பவா் அன்சாரின் மோட்டாா் சைக்கிளை இரவல் வாங்கிச் சென்றுள்ளாா். மாலை நேரத்தில் அன்சாரின் கடைக்கு வந்த ஆசிஃப், 200 ரூபாய் கடனாகத் தருமாறு கேட்டுள்ளாா். ஆனால் அன்சார் கடன் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிஃப் தான் பையில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து அன்சாரின் தலையில் சுட்டாா். தலையில் குண்டு பாய்ந்ததால் அன்சாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டாா். இதையடுத்து, ஆசிஃப் அங்கிருந்து தப்பியோடினாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில் துப்பாக்கியால் சுட்ட ஆசிஃப் போதைப்பொருளுக்கு அடிமையானவா் என்பது தெரியவந்தது. தான் ஓட்டிவந்த அன்சாரின் மோட்டாா் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு ஆசிஃப் தப்பியுள்ளாா். இதையடுத்து அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

;