லக்னோ மோடி மூன்றாவது முறையாக பிரத மர் ஆன பின்பு நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கொடுமைகள் மிக மோச மான அளவில் அதிகரித்து வரு கிறது. அயோத்தி சம்பவம் போல பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள மசூதிகளில் இந்துக் கோ விலை தேடி, முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் வன்முறை தூண்டப்பட்டு வருகிறது. உத்த ரப்பிரதேசத்தின் சம்பல், ராஜஸ் தானின் ஆஜ்மீர் உள்ளிட்ட இடங்க ளில் உள்ள மசூதிகளில் இந்து கோவில் தேடும் பணியால் வன் முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. கடந்த ஒரு மாத காலமாக இரண்டு பகுதிகளிலும் வன்முறை பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில், பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தின் சீதாபூரில் தீவிர இந்துத்துவா அமைப்பான ராஷ்டிரிய இந்து சேனா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் மூலம் முஸ்லிம் மக்களை மதமாற்றம் செய்யும் பணியை துவங்கியுள்ளது ஆதித்யநாத் அரசு.
சீதாபூரில் முஸ்லிம் இளைஞர் ஒருவரை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சக்ரேஷ் மிஷ்ரா வும், ராஷ்டிரிய இந்து சேனா வின் தலைவர் விகாஸூம் இணை ந்து சிறை மற்றும் தேசிய பாது காப்பு முகமை (NSA) அச்சுறுத் தல்களின் கீழ் வலுக்கட்டாயமாக மொட்டையடித்து இந்து மதத்திற்கு மாற்றியுள்ளனர். மத மாற்றம் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞரின் சகோதரர் பதே ஹுதீன் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டிய பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதே போல சீதாபூரில் பல் வேறு முஸ்லிம் மக்களை வலுக் கட்டாயமாக மிரட்டி மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பாஜக வின் இந்த மதமாற்ற நடவடிக்கை க்கு சமாஜ்்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
விவசாயிகளின் பிரச்சனைகளை திசை திருப்பவே பாஜக மசூதிகளை தோண்டுகிறது
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
விவசாயிகளின் பிரச்சனைகளை திசை திருப்பவே இந்து கோ வில்கள் இருப்பதாக கூறி மசூதி களில் தோண்டும் பணியை பாஜக மேற் கொண்டு வருகிறது என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் எம்.பி., குற்றம் சாட்டி யுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,”நம் நாட்டில் வழிபாட்டுத்தலங் கள் சட்டம் உள்ளது. ஆனால் இந்தச் சட்டத்தை மீறி இந்து கோவில்கள் இருப் பதாக கூறி பாஜக மசூதிகளில் தோண்டும் பணியை மேற்கொண்டு வன்முறையை தூண்டி வருகிறது. இந்த தேடும் பணிக ளால் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போ வதில்லை. ஆனால் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு பதிலளிக்க விரும்பாத தால் பாஜக இதுபோன்ற பிரச்சனைகளை எழுப்புகிறது. மத்தியில் 10 ஆண்டுகளா கவும், உத்தரப்பிரதேசத்தில் 7 ஆண்டுக ளாகவும் பாஜக ஆட்சியில் இருந்ததால் வேலையில்லா திண்டாட்டம் சாதனை அளவை எட்டியுள்ளது. மோடி அரசுக்கு எதிராக பேசும் எம்.பி.,களுக்கு எதிராக வும், சம்பல் போன்ற இடங்களில் மக்கள் மீது போடப்படும் பொய் வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.