states

img

உ.பி: மாணவர்கள் கழிப்பறை கழுவும் வீடியோ வைரல் - தலைமை ஆசிரியர் இடைநீக்கம்

உத்தரப் பிரதேசத்தில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்றில் மாணவர்கள் கழிப்பறைகளைக் கழுவும் வீடுயோ ஒன்று வரலான நிலையில், அப்பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் சோஹான் தொகுதியில் உள்ள பிப்ரா கலா-1 இல் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில், மாணவர்களை வற்புறுத்தி கழிப்பறைகளைக் கழுவ வைத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்து பலர் எதிர்ப்பு தெரிவித்த  நிலையில், கல்வித்துறை அதிகாரி இது குறித்து விசாரணை நடத்தினார். இதை அடுத்து, அப்பள்ளி தலைமை ஆசிரியர் மிருத்யுஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.