states

img

உ.பி தலித் பெண் கும்பல் பாலியல் வன்கொடுமை

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த தலித்  பெண் தனது தோழி மூலமாக கடன்  வாங்கியுள்ளார். கடனை திருப்பி கொடுக்க கால தாமதம் ஆனதால், கடன் பற்றி சமாதானம் பேசிக்  கொள்ளலாம் என தலித் பெண்ணை தோழி ஒரு  ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு  கடன் கொடுத்ததாக கூறப்படும் 2 ஆண்கள் தலித் பெண்ணை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து, சமைக்கப்படாத இறைச்சியை உண்  ணுமாறு கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் பாலியல் வன் கொடுமை சம்பவத்தை  வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் தருமாறு அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட தலித் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தோழி உட்பட 3 பேரையும் வன்கொடுமை சட்டம்  மற்றும் மிரட்டி பணம் பறித்த வழக்கின் கீழ் போலீ சார் கைது செய்துள்ளனர்.