states

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவிற்கு பலத்த அடி

நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதி களைக் கொண்டது உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆகும். அங்கு 80 மக்களவை தொகு திகள் உள்ள நிலையில், பாபர் மசூதி - ராமர் கோவில், ஞானவாபி மசூதி உள்ளிட்ட பல்வேறு வகுப்புவாத பிரச்சனைகளை முன்வைத்து 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிக தொகுதிகளை பெற்று அரசியல் ஆதாயம் பெற்று வந்தது பாஜக.  இந்நிலையில், 18ஆவது மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய “இந்தியா” பாஜகவின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வலுவான பிரச்சாரம் மேற்கொண்டது. “இந்தியா” கூட்டணியின் உறுதியான பிரச்சாரத்தால் நாட்டின் நிலை மையை புரிந்துகொண்ட உத்தரப்பிரதேச மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் மொத்த முள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளையும், 2019 இல் 62 தொகுதிகளையும் வென்ற பாஜக 2024 மக்களவைத் தேர்தலில் 50 தொகுதிக ளைக் கூட வெல்ல முடியாமல் வெறும் 35 தொகு திகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் “இந்தியா” கூட்டணி 45 தொகுதிகளில் (சமாஜ்வாதி - 38, காங்கிரஸ் - 6, ஆசாத் - 1) முன்னிலை பெற்றது.

;