செவ்வாய், ஜனவரி 26, 2021

states

மாணவர் நலன் கருதி 1 ரூபாய் கட்டண பேருந்து இயக்க கோரிக்கை....

புதுச்சேரி:
மாணவர் நலன் கருதி ஒரு ரூபாய் கட்டண பேருந்தை இயக்க வேண்டும் என்று காரைக்கால் பகுதி மக்கள் புதுவை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் சிறப்பு பேருந்துகள் இயங்காததால் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.புதுச்சேரி  காரைக்கால் மாவட் டத்தில் உள்ள மாணவர்களுக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வந்த  நிலையில், நிதி சுமை காரணமாக,  தற்போது காரைக்காலில் பேருந்துகள்  இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால்  மாணவர்கள் அன்றாடம் 10 
ரூபாய் முதல் 20, ரூபாய் வரை செலவு செய்து பள்ளிக்கு வந்து செல்லும் நிலை  ஏற்பட்டுள்ளது.மேலும், தனியார் மற்றும் தமிழக பேருந்துகளை பயன்படுத்தி கூட்ட நெரிசலுடன் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதால், மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அச்சமும் எழுந்துள்ளது. இதனால் ஒரு ரூபாய் கட்டண சிறப்பு பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;