ஆந்திராவில் ஷேர் ஆட்டோ ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரா – நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சங்கம் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர், ஷேர் ஆட்டோவில் அருகே உள்ள சிவன் கோவிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள பீராபேரூ ஆற்றின் பாலத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி ஷேர் ஆட்டோவில் மோதி விபத்துக்குள்ளானது. லாரி மோதியதில் ஷேர் ஆட்டோ பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு ஆற்றில் விழுந்தது.
இந்த விபத்தில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 பேரை மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட 7 பேரில், 14 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து மாயமானவர்களை தொடர்ந்து மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழு ஈடுபட்டு வருகின்றனர்.