science

img

வேளாண் நிலம் : மீன் வளர்ப்பு

மீன் நீர் வாழ் உயிரினம் என நாம் அனைவரும் அறிந்ததே, ஆனால் வசிக்கும் நீரின் தன்மையினை பொறுத்து அதல் இருக்கும் மீனின் தன்மையும் மாறு படுகிறது. பரவலாக பார்க்கும் போது மீன்கள் 5 விதமான நீரில் வளர்கிறது எனலாம்.

நன்னீர் வளர்ப்பு; உவர்நீர் வளர்ப்பு; குளிர்நீர் வளர்ப்பு; வண்ணமீன் / அலங்கார மீன் வளர்ப்பு; கடல்நீர் வளர்ப்பு; நன்னீர் மீன் வளர்ப்பு பொதுவாக இவ்வகையான மீன்கள் குளங்கள், நீர்த்தொட்டிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் நிலைகளில் வளர்க்கப்படுகின்றது. 

நன்னீர் வளர்ப்பு
இவ்வகை மீன்வளர்ப்பில் அடிப்படையாக கவனிக்க வேண்டியது உணவு சுழற்சி ஆகும். நன்னீர் வளர்ப்பில் ஆதாரம் தாவரநுண்ணுயிர் மிதவைகள் ஆகும். இந்த நுண்ணுயிர்கள் நீரினைபச்சை நிறமாக மாற்றி, நுண்ணுயிர்ப் பெருக்கத்தை அதிகரிக்கிறது. இதனால் இருப்புச் செய்யும் மீன்களுக்கு இதுவே ஒரு இயற்கைஉரமாக மாறுகிறது. கரியமில வாயு, தண்ணீர் மற்றும் சூரிய ஒளி எனஇவையனைத்தும் இருந்தாலும் மிதவை தாவர நுண்ணுயிர்களுக்கு கனிமச்சத்துக்கள் அவசியமாகிறது. மிதவை தாவர நுண்ணுயிர்கள் வளர்வதற்க்கும் மற்றும் குளத்தின் உற்பத்தி திறனிற்கும் தேவையான சத்துக்கள் நீரில் இருக்க வேண்டும். மண் மற்றும் நீரின் மேலாண்மையை பொருத்தே குளத்தில் உள்ள இருப்பு மீன்களுக்கு, இயற்கை உணவு கிடைக்கும்.

உவர்நீர் வளர்ப்பு
உவர் நீர் வளர்ப்பில் நீரின் உப்புத்தன்மையை தவிர, மற்றவைகள் அனைத்தும் நன்னீர் மீன் வளத்தை போன்றே இருக்கும். உவர்ப்புத்தன்மை என்பது நீரில் கரையாமல் உள்ள உப்பின் அளவை குறிக்கும். பொதுவாக உவர் நீர் குளத்தில் உப்புத்தன்மையானது 0.5% - 30% வரை இருக்கும். இந்த உப்புத்தன்மையினை இரண்டு காரணிகள் நிர்ணயிக்கின்றன , ஒன்று அருகிலிருக்கும் சமுத்திரம் மற்றொன்று நிலவிவரும் பருவ நிலை.
நீரின் தன்மைக்கு ஏற்றவாறு அதில் இருக்கும் தாவரம் மற்றும்விலங்கினங்கள் மாறுபடுகிறது. வினையியல் மாற்றம், வேதியில்மாற்றம் போன்ற காரணங்களால் நீரில் உள்ள உப்புத்தன்மை உணவை மாறி மீன்களுக்கு ஊட்டச்சத்தாக அமைந்து விடுகிறது.

பொதுவாகவே உவர் நீரில் வளரும் மீன் இனங்கள் இயற்கையிலேஅதிக உப்பைத் தாங்கி வளரக்கூடிய திறன் கொண்டவை. பென்னேயிஸ் மோனோடான் வகை இறால்கள் அதிகமாக உவர் நீரில் உற்பத்தியாகின்றன. இருப்பினும் உவர் நீரில் அதிக அளவிலான இறப்புகள் இருக்கும். நன்னீருடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி விகிதம் சற்றுகுறைவாக இருக்கும். உப்புத்தன்மை 10% குறைவாக இருந்தால்15% -30% உள்ள உப்புத்தன்மையில் பென்னேயிஸ் மோனோடான்நன்றாக வளரும். ஆனால் நன்னீரில் 30 நாட்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது.

வண்ண மீன்/அலங்கார மீன் வளர்ப்பு
பெரும்பாலான இல்லங்களில் செல்ல பிராணிகளின் பட்டியலில் இன்று வண்ண மீன்கள் மற்றும் அலங்கார மீன்கள் இடம்பெற்றுள்ளது எனலாம். எனினும் இவ்வகை மீன்களை வளர்க்கும்போது மிகுந்த சிரத்தையுடன் கவனிக்க வேண்டும். இவ்வகை மீன்களை வளர்ப்பது சற்று சவாலானது எனலாம்.வண்ண மீன்கள் மற்றும் அலங்கார மீன்கள் பண்ணைகளில் இருந்தோ, அருங்காட்சியகத்தில் இருந்தோ வாங்கப்படுகிறது. இதனால் இவ்வகை மீன்களின் குணாதிசியங்கள் மற்ற மீன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. மேலும் இவ்வகைமீன்களால் மற்ற வகை மீன்களுடன் இருக்க இயலாது. குறிப்பிட்டஅளவு நீரில் ஒரே விதமான மீன்களுடன் முட்டையிட்டு இனத்தைபெருக்குகின்றன.

முட்டையிடும் மீன்கள்
பொதுவாக வளர்ப்பு மீன்கள் அதன் இனப்பெருக்கத் தன்மையினை பொறுத்து 2 வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முட்டையிடுவன மற்றும் உள் பொரி முட்டையிடுவன என்பனவாகும். இவ்வகை மீன்கள் முட்டையிடும் போது பாதுகாப்பாக முட்டையைப் புதைத்து வைக்கும். ஒவ்வொரு இனமும் முட்டையை ஒவ்வொரு விதமாக பாதுகாக்கிறது. வாயில் வைத்து முட்டையைப் பாதுகாப்பவை, கூடுகட்டி பாதுகாப்பவை, முட்டையை சுமந்து கொண்டேதிரிபவை எனப் பல வகை இனங்கள் உள்ளன. அலங்கார மீன்வளர்க்கும் போது அடிப்படையில் கவனிக்க வேண்டியது, வளர்ப்பதன் நோக்கம், இனப்பெருக்கம் மட்டும், வளர்ப்பு மட்டும் என இடவசதியை பொறுத்து இனப்பெருக்கம் மற்றும் வளர்ப்பு மேற் கொள்ளலாம்.

தொட்டிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
அலங்கார மற்றும் வண்ண மீன்களை வளர்க்கும் போது சாதாரணமான சிமெண்ட் தொட்டிகளிலோ அல்லது கண்ணாடி தொட்டிகளிலோ வளர்க்கலாம். சிமெண்ட் தொட்டிகள் பராமரிக்க எளிதாகமற்றும் நீடித்து இருக்கும். ஒரு இனத்தையோ அல்லது இணக்கமானஇரண்டு அல்லது மூன்று இனங்களை ஒரே தொட்டியில் வளர்க்கலாம். மீன் வளர்ப்பிற்கு நிலத்தடி கிணறுகள் / ஆழ் குழாய் கிணறுகள் சிறந்ததாக உள்ளன.

உணவு மேலாண்மை
மீன்களுக்கு தேவைப்படும் உணவு மற்றும் உணவின் வகைமீனின் அளவை பொறுத்தே அமையும். பொதுவாக மீன்களுக்கானஉணவு ஒரு நாளைக்கு இரண்டு முறை அல்லது தேவையை பொறுத்து வழங்கப்படும். உணவாக இடுவதில் தினம் தயார் செய்யப்பட்ட கடைகளில் விற்கும் உணவுகள் மட்டும் இன்றி, மண்புழுபோன்றாவற்றையும் அடிக்கடி கொடுக்கலாம். மீனின் வளர்ச்சிக்குஇது உதவும். இளம் மீன்கள் இன்ஃபுசோரியா, ஆர்டிமியா, டாஃப்னியா, கொசு முட்டைகள், ட்யூபிஃபெக்ஸ் மற்றும் புழுக்கள்முதலியவற்றை உணவாக கொடுக்கலாம்.

பொதுவான நோய் மற்றும் அறிகுறிகள்
மீன்களுக்குப் பொதுவாகவே நோய் எதிர்ப்புசக்தி இயற்கையாகவே அமைந்துள்ளது. இதன் வெளிப்பகுதி முழுவதும் வழவழப்புத்தன்மையுடனும் , நோய்கிருமிகள் உடலுக்குள் நுழைய முடியாதபடி ஒரு தடுப்புச் சுவர் போல அமைந்திருப்பதால் நோய்க்காரணிகளை எதிர்க்கும் சக்தி கொண்டுள்ளது. இது தவிர ஒட்டுண்ணிகள் மீன்களின் உடம்பில் நுழையும்போது, அவற்றைகாப்புறையிட்டு செயலிழக்கச் செய்து விடுவதால் மீன்கள் இயற்கையாகவே ஆரோக்கியமானதாகும். இருப்பினும் சில சமயங்களில் சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டினால் நோய் பரவுகிறது.இவற்றை கூர்ந்து கவனித்து, நோய் பாதித்த மீன்களை உடனடியாக தொட்டியிலிருந்து அகற்ற வேண்டும்.

;