science

img

அரிய நிகழ்வான 'சூப்பர் ப்ளூ மூன்’ இன்று காணலாம்!

வானத்தில் நிகழும் அரிய நிகழ்வான 'சூப்பர் ப்ளூ மூன்’ எனப்படும் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான நிலவு, இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்கி நாளை காலை 7.30 மணி வரை காணலாம்.
பூமியை நிலவு சுற்றி வரும் சுற்று வட்டப்பாதை மிகவும் சிறியதாக இருக்கும்போது பூமியை மிக அருகில் நிலவு தோன்றும். இந்த நிகழ்வை சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல், ஒரே மாதத்தில் இரண்டாவதாக வரும் முழு நிலவை ப்ளூ மூன் (Blue Moon) என்று அழைக்கப்படுகின்றது. இந்த இரண்டு நிகழ்வும் ஒரே நாளில் நடைபெறுவதை 'சூப்பர் ப்ளூ மூன்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு, இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்கி நாளை காலை 7.30 மணி வரை காணலாம்.
பூமியில் இருந்து 4,05,500 கி.மீ. தொலைவில் இருக்கும் நிலவு, இன்று 3,57,344 கி.மீ தொலைவுக்கு சற்று நெருங்கி வருகிறதால், வழக்கமான அளவை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரியும்.
அடுத்த சூப்பர் ப்ளூ மூன் 2037-ஆம் ஆண்டு நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.