science

பாசியில் இருந்து வைட்டமின் பி 12 - சிதம்பரம் இரவிச்சந்திரன்

சைவ உணவு உண்பவர்கள் அவர்களின் உணவின் மூலம் பெறமுடியாத வைட்டமின் பி 12 என்ற முக்கியத்துவம் வாய்ந்த உயிர்ச்சத்தை பாசியில் இருந்து பெறமுடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தாவரங்களில் இல்லாத ஆனால் இயற்கையாக நீரில் வாழும் பாசிகள் இந்த வைட்டமின் சத்தை சைவ உணவு உண்பவர்களுக்கு அளிக்கிறது. இதன் மூலம் வைட்டமின் பி 12 பற்றாக்குறைப் பிரச்சனைக்கு நல்ல தீர்வு ஏற்படும் என்று நம்பப்படுகிறது. தாவர உணவை மட்டுமே உண்பவர்கள், இறைச்சி மற்றும் பால் பொருட்களை எடுத்துக் கொள்பவர்கள் அவற்றில் இருந்து பெறும் வைட்ட மின் பி 12 சத்தை தாவரங்களில் இருந்து பெற முடி யாததால் அதன் பற்றாக்குறையினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

வைட்டமின் பி 12 இன் முக்கியத்துவம்

வைட்டமின் பி 12 இரத்த செல்கள், நரம்பு  செல்களின் உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின் பற்றாக்குறை யைத் தீர்க்க முற்றிலும் எதிர்பாராத ஒரு நல்ல தீர்வை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நீரில் அதிகம் வளரும், வேர்களும் தண்டும் இல்லாத பல பாசிகள் பி 12 சத்தை உருவாக்க உதவுகின்றன. விரைவில் வணிகரீதியாக இதன் மூலம் வைட்டமின் பி 12 சத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது. வைட்டமின் பற்றாக்குறையை சரிசெய்ய  அறிவியல்ரீதியாக பல தாவர துணைப்பொருட்க ளும் (subliments)தற்போது உள்ளன என்றாலும் அவை பல குறைபாடுகளைக் கொண்டுள்ளன. இதில் முக்கியமானது இவற்றில்  வைட்டமின் பி 12 இல்லை என்பதே என்று கேம்பி ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தாவர வளர்சிதை மாற்றம் பற்றி ஆராயும் பிரிவின் தலைவர் மற்றும் ஆய்வுக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஆலிசன் ஸ்மித் (Prof Alison Smith) கூறுகிறார். சந்தையில் இன்று கிடைக்கும் பி 12ஐ அடிப்படையாகக் கொண்ட துணைப்பொருட்கள் பல செயல்திறனற்றவையாக உள்ளன என்று ஆய்வுக்குழுவின் மற்றொரு ஆய்வாளர் டாக்டர் பேயம் மெஹ்ர்ஷாகி (Dr Payam Mehrshahi)  கூறுகிறார். தாவர உணவை உண்பவர்கள் தவறான துணைப்பொருட்களைத் தேர்ந்தெ டுத்தால் அவை உடலிற்கு தொடர்ந்தும் தீங்கையே  செய்யும். பல தாவர உணவு உண்பவர்கள் இயற்கை வழியிலேயே தங்கள் உணவுடன் பி 12 வைட்டமினைப் பெற விரும்புகின்றனர். ஆனால் இந்த சத்தை தாவரங்களில் இருந்து பெறமுடியாது. இந்நிலையில் இக்கண்டுபிடிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வைட்டமின் பி 12 உடல் நலத்திற்கு முக்கியமாகத் தேவைப்படும் ஒரு நுண்ணூட்டச்சத்து. இதன்  குறைபாடு தசைகளின் பலவீனம், உணர்வின்மை,  மூக்கு ஒழுகுதல், எடை இழப்பு, சோர்வு, இதயத்துடிப்பு அதிகரித்தல் போன்ற பிரச்ச னைகளை ஏற்படுத்துகிறது. இதன் தொடர்ச்சி யான குறைபாடு பாதிக்கப்பட்டவர்களிடம் நாளடைவில் தீங்கு விளைவிக்கும் இரத்த சோகை, இதயக்கோளாறுகள் மற்றும் சர்க்கரை நோயை ஏற்படுத்துகிறது.

பசுக்கள் மற்றும் செம்மறியாடுகளின் குடற்பகுதியில் பி 12 பாக்டீரியாக்களால் இயற்கை யாக உற்பத்தி செய்யப்படுகிறது. இறைச்சியே இதன் முதன்மை மூலம். இதுதவிர பால் பொருட்கள் மற்றும் முட்டையில் இது உள்ளது.  சமீப ஆண்டுகளில் யுகேயில் மட்டும் ஒரு  மில்லியன் மக்கள் சைவ உணவு உண்ப வர்களின் பட்டியலில் சேர்ந்துள்ளனர். இது அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 1.5% உயர்வைக் குறிக்கிறது. இதனால் 2018  முதல் அங்கு தாவர உணவை அடிப்படை யாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உணவுப்  பொருட்களின் விற்பனை 49% அதிகரித்துள்ளது. என்றாலும் இப்பொருட்கள் உண்மையில் 10% வைட்டமின் பி 12 சத்தை மட்டுமே அளிக்கின்றன. அன்றாடம் இயல்பாக உடலிற்கு  தேவைப்படும் 0.5 மி கிராம் என்ற அளவை விட இது மிகக் குறைவானதே என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐரோப்பிய சத்துணவு பற்றிய ஆய்வறிக்கைக் கூறுகிறது. கருவுற்றிருக்கும் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், முதியோர் வைட்டமின் பி 12  பற்றாக்குறையால் உடல் நல பாதிப்புகளுக்கு உள்ளாகும் ஆபத்தை இப்போது அதிகம்  எதிர்கொள்கின்றனர் என்று ஆய்வறிக்கை கூறு கிறது. இது இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு மாற்றான பலன் தரும் துணைப்பொருட்களைக் கண்டுபிடிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது என்று வைட்டமின் பி 12 பற்றாக்குறை ஏற்படுத்தும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க அமைக்கப்பட்ட கிளப் பி 12 (CluB12) என்ற ஆய்வுக்குழு கூறுகிறது. இதன் ஒரு பகுதியாகவே ஸ்மித்  தலைமையிலான ஆய்வுக்குழு இந்த கண்டு பிடிப்பை நிகழ்த்தியுள்ளது. பாசிகள் எவ்வாறு வைட்டமின் பி 12 சத்தை சேகரிக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இதை பாசிகளே தயாரிக்கவில்லை என்றா லும் அவை அதை தாங்கள் இருக்கும் பாக்டீ ரியாக்கள் உருவாக்கி வைத்துள்ள சுற்றுப் புறங்களில் இருந்தே பெறுகின்றன. பல பாசி களுக்கு இத்திறன் இருந்தாலும் விஞ்ஞானிகள் மனித உடலிற்கு அதிக நன்மையளிக்கக்கூடிய பாசிகளை அடையாளம் கண்டுள்ளனர்.  இத னால் விரைவில் தொழிற்துறையினர் பெருமள வில் பாசிகளில் இருந்து வைட்டமின் பி 12  சத்தை இயற்கையான வழியில் உற்பத்தி  செய்யத் தொடங்குவர் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
 

;