science

img

மருத்துவக்கதிர் - ரமணன்

குறைப் பிரசவத்தை தடுக்கும் ஆய்வுகள்

கருவிலிருக்கும் சிசுவுக்கும் தாய்க்கும் இடையே தகவல் பரிமாற்றங்கள் நடை பெறுகின்றன என்பது ஏற்கனவே அறி யப்பட்ட ஒன்று. தாய் மற்றும் சிசுவின் செல்கள்  எக்சோசோம்(exosome) எனப்படும் வேதிப்  பொருள் அடங்கிய பைகள் மூலம் தொடர்பு  கொள்கின்றனவாம். பிரசவ காலம் நெருங்கும்  போது சிசுவின் உறுப்புகள் முழுவதும் வளர்ச்சி யடைந்துவிட்டன என எக்சோசோம்கள் தாயின்  உடலுக்கு தகவல் தெரிவிக்கின்றன. இதனால் பிரசவ வலி தொடங்குகிறது. மேற்கொண்டு எலி களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சிசுவிலி ருந்து எக்சோசோம்கள் தாயின் பக்கம் செல் வது அதன் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி குறித்த நல்ல அறிகுறி; தாயிடமிருந்து சிசு பக்கம் செல்லும்போது இயக்க மாறுபாடுகள் ஏற்படுகிறதாம். தாயின் உடலிலிருந்து எடுக்  கப்பட்ட இரத்த மாதிரிகளை சோதித்து இந்த  வளர்ச்சி, மாற்றங்கள் ஆகியவை அறியப்படு கின்றன. அண்மைக் காலங்களில் அதிகரித்து வரும் குறைப்பிரசவங்களை தடுக்க இந்த ஆய்வு உதவலாம். டெக்சாஸ் மருத்துவப் பல்க லைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வு இதனை தெரிவிக்கிறது.

தோல் எப்போது உருவானது?

உலகின் மிகப் பழமையான  தோல் படிமம் ஒன்று அமெ ரிக்காவிலுள்ள ஒக்ல ஹோமா சுண்ணாம்பு காளவாயி லிருந்து கிடைத்துள்ளது. ஏறத்  தாழ 290மில்லியன் ஆண்டுகள் பழ மையான இது, ஆம்னியோட்ஸ் (amniotes) எனப்படும் நான்கு கால் முதுகெலும்பு இனத்தின் தொடக்க கால விலங்கின் தோலா கும். 541 மில்லியன் ஆண்டுகளுக்  கும் 252 மில்லியன் ஆண்டுகளுக்  கும் இடைப்பட்ட பாலியோஸோ யிக்(Paleozoic) காலத்தில் விலங்  குகள் கடலிலிருந்து நிலத்திற்கு  இடம் பெயர்ந்து பல இனமாக மாறி யதாம். இந்த தோல் மாதிரிகளில் ஒன்றுக்கொன்று மேவாத செதில்  கள் காணப்படுகின்றன. அவை  அளவிலும் அடர்த்தியிலும் வேறு படுவதால் ஆம்னியோட்களின் வெவ்வேறு உடல் பாகங்களிலிருந்  தும் வேறு வேறு விலங்குகளிலிருந் தும் வந்திருக்கலாம். இவற்றி லுள்ள அடர்த்தியான மேலடுக்கு,  தொடக்க கால ஆம்னியோட்டு களை இயற்கை சக்திகளிலிருந்து பாதுகாத்திருக்கும். நீரை தக்க  வைத்துக் கொள்ளவும் உதவி யிருக்கும். புதிய வளர்ச்சியான இந்த மேல்பரப்பு பறவைகளின் இறகுகளாகவும் பாலூட்டிகளின் உரோமங்களாகவும் காலப்போக் கில் மாறின. இந்த தோல் படிமம் சிறப்பாக பேணப்பட்ட நிலையில் இருப்பதற்கு சிலகாரணிகள் பங்க ளித்துள்ளன. சடலங்கள் மென்மை யான சேற்றுப் பகுதியில் புதைந்து  போனதால் ஆக்சிஜன் இல்லாமல்  அழுகுவது தாமதப்படுத்தப்பட் டது. இரும்பு தாது நிறைந்த நிலத்  தடி நீரில் அமிழ்ந்து இருந்ததால்  திசுக்கள் பேணப்பட்டுள்ளன. மேலும் அந்த இடம் எண்ணெய்  ஊற்றாக இருந்ததால் பெட்ரோலி யமும் தாரும் சடலங்களுள் புகுந்து  அழுகுவதை தடுத்துவிட்டன. அவ ற்றை கருப்பாகவும் மாற்றின.

அதென்ன  10000 அடிகள்?

ஆரோக்கியமான நீண்ட வாழ்  நாளுக்கு ஒவ்வொரு நாளும் 10000 காலடிகள் நடக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறது. இது ஓடியாடி வேலை செய்யாத நபர்களுக்கு சற்று சிரம மாக இருக்கும். மேலும் இது தவ றான வரையறை என்றும் கருதப்பட்  டது. இப்போது நான்கு கண்டங்களில்  ஆயிரக்கணக்கான மக்களை உள்ள டக்கிய 15 ஆய்வுகளின் அடிப்படை யில் 6000 அடிகள் உகந்ததாக இருக் கும் என்று காணப்பட்டுள்ளது. இது வயதைப் பொறுத்தும் இருக்கும். மனிதர்கள் இயல்பாகவே நடப்ப தற்கான கட்டமைப்பு கொண்டவர் கள். உணவையும் தண்ணீரையும் தேடி அலைந்த படிநிலை வளர்ச்சி யில் நமது உடலியல், நீண்ட தூரம்  நடப்பதற்கான முறையில் சீரமைக் கப்பட்டுள்ளது. தலைகீழான ஊசல்  போல் நாம் முன்னும் பின்னும் ஆடி ஆடி நடக்கும்போது வெப்பத்தை எளி தாக வெளிவிட முடிகிறது.

எனவே நமது வளர்சிதை இயக்கங்கள், இதய மும் இரத்த நாளங்களும் வலுவாக இருத்தல், எலும்புகள் மற்றும் தசை களின் மீதான தாக்கம், ஏன், நமது மன  ஆரோக்கியம் கூட, நல்ல நடையுடன்  இணைந்துள்ளது. நமது பரபரப்பான தினசரி நடவடிக்கைகளில் எந்தவித மான நடையையும் சேர்த்துக் கொள் வது நீண்ட, ஆரோக்கியமான மகிழ்ச்சி  யான வாழ்க்கைக்கு உதவும். 1964 டோக்யோ ஒலிம்பிக் போட்டி யின் பரபரப்பை பயன்படுத்திக் கொண்டு ஜப்பான் நாட்டு யமசா  எனும் கடிகார நிறுவனம் பெடோ மீட்டர் எனும் கருவியை தயாரித்தார் கள். அதற்கு 10000 அடிகள் எனும் பொருள் கொண்ட ‘மன்போ-கெய்’  என்று பெயரிட்டார்கள். ஏன் 10000 அடி கள்? எல்லாம் பழைய வணிக விளம்பர உத்திதான். அது ஒரு கவர்ச்சிகரமான முழு எண். சிரமமான  இலக்காகவும் அதே சமயம் முயற்சி செய்து பார்க்கக் கூடியதுமாகவும் இருந்தது. ஆனால் அதற்கு அறிவி யல் அடிப்படை எதுவும் இல்லை. 2021 இல் நடத்தப்பட்ட ஆய்வின்  மூலம் நடுத்தர வயதினர் 7000 அடி கள் நடந்தால் அகால மரணத்தை 50 முதல் 70 சதவீதம் வரை குறைக்க லாம் என்று காணப்பட்டது. 2022இல் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில்  நடைப் பயிற்சியை மேற்கொண்ட வயதானவர்களில் 25% பேர் 40இலி ருந்து 53%வரை மரண வாய்ப்பு குறைவது தெரிந்தது. நடைப்பயிற்சியை தவிர மற்ற  கடின வழிகளில் முயற்சி செய்வதன்  மூலமும் இதைப் போன்ற பலன்  களை அடையலாம். குறிப்பாக வீட்டில் வெறுமனே இருப்பவர்கள் அரைமணி நேரம் தீவிர வேலை களில் ஈடுபடலாம். வேகமாக நடப்ப தாலோ அல்லது 6000, 8000 என வய துக்கு தகுந்த எண்ணிக்கையை விட  கூடுதலாக நடப்பதாலோ அதிக  பலன்கள் கிடைப்பதாக தெரிய வில்லை. இந்த ஆய்வு ‘தி லான்செட்: பொது நலன்’ என்கிற இதழில் வெளி வந்துள்ளது.

;