science

img

உடல் பருமனால் புற்றுநோய் அபாயம் - ஆய்வு தகவல்

உடல் பருமனால், சில வகையான புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக, பிரிட்டனில் ஒரு புற்றுநோய் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமானது புகைப்பழக்கத்தை விடவும் உடல் பருமனால் குடல், சிறுநீரகம், கல்லீரல், கருப்பை புற்றுநோய் போன்றவற்றுக்கு முக்கிய காரணியாக அமைகிறதாகவும், மில்லியன் கணக்கிலான மக்கள் உடல் பருமன் காரணமாக புற்றுநோய் அபாயத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. 

இந்த ஆய்வில், பிரிட்டனில் உடல் பருமன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 22,800 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர், அதே சமயம் புகை பிடித்தல் காரணமாக 54,300 பேர் பாதிப்படைவதாக கூறப்படுகின்றது. மேலும், மார்பக புற்றுநோய் (மாதவிடாய் நின்ற பெண்களுக்கு), குடல் புற்றுநோய், கணைய புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், மேல் வயிறு புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய், கருப்பை புற்றுநோய், சினைப்பை புற்றுநோய், தைராய்டு புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், மூளை புற்றுநோய் ஆகிய 13 புற்றுநோய்கள் உடல் பருமனோடு தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழுப்பு செல்கள் கூடுதல் ஹார்மோன்களை உண்டாக்குகின்றன. இதையடுத்து வளர்ச்சிக் காரணிகள் உடலில் உள்ள அணுக்களை மேலும் பிரியச் செய்கின்றன. இதனால் புற்றுநோய் அணுக்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. உடல் பருமனோடு இருப்பதால் ஒருவருக்கு நிச்சயம் புற்றுநோய் வரும் என்பது அர்த்தமல்ல. ஆனால் புற்றுநோய் அபாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதே இந்த ஆய்வின் பொருள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 

;