science

img

ஜிகா, டெங்கு உள்ளிட்ட பூச்சிகளால் பரவும் நோய்க்கிருமிகளால் அடுத்த தொற்றுநோய் - WHO 

உலகம் எதிர்கொள்ளவிருக்கும் அடுத்த தொற்றுநோய் பூச்சியால் பரவும் நோய்களால் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெங்கு, மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற பூச்சிகள் மூலம் பரவும் ஆர்போவைரஸ்கள் காரணமாக  வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் வாழும் சுமார் 3.9 பில்லியன் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏடிஸ் கொசுக்கள் உள்ளிட்ட இந்த ஆர்போவைரஸ்களால் பரவும் நோய்கள் தற்போது உலகளவில் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக காரணிகளின் ஒருங்கிணைப்பால் இந்த நோய்ப்பரவல் தூண்டப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய்களின் ஆபத்து அதிகரித்து வருகிறது என்பதற்கான அறிகுறிகள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தொற்று கடந்த இரு ஆண்டுகளாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அடுத்த தொற்றுநோய், ஒரு புதிய ஆர்போவைரஸ் காரணமாக இருக்கலாம். மேலும் ஆபத்து அதிகரித்து வருவதற்கான சில சமிக்ஞைகள் எங்களிடம் உள்ளன என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

;