science

img

சட்டைப்பை அளவே உள்ள ரோபோவை உருவாக்கிய ஆய்வாளர்கள்

சுத்தம் செய்யக்கூடிய சட்டைப்பை அளவே உள்ள சிறிய ரோபோ ஒன்றை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டால் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று சாஃப்ட் ரோபோடிக்ஸ் (Soft Robotics) என்ற இணைய இதழில் வெளியானது. அதில், எலக்ட்ரோ ஸ்கின் (Electro Skin) என அழைக்கப்படும் சட்டைப்பை அளவே உள்ள சிறிய வகை ரோபோ ஒன்று, சுவர்கள் மற்றும் வீட்டின் சீலிங் பகுதிகளை சுத்தம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மென்மைத் தன்மை கொண்ட ரோபோக்களின் அடுத்த தலைமுறை ரோபோவாகவும் பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாகவே நெகிழித்தன்மை கொண்டதாக காணப்படுகின்றது. எனவே இந்த ரோபோவை முறுக்கவோ அல்லது வளைக்கவோ முடியும். மேலும் மேற்பரப்புகளில் இலகுவாக நகரக்கூடிய தன்மையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் நுழையக் கடினமான உடைந்த கட்டிடங்கள் போன்றவற்றிலும் இலகுவாக நுழைந்து பணிகளை ஆற்றக்கூடிய திறமையையும் இந்த ரோபோ கொண்டுள்ளது. 
 

;